”நிறைய எதிரிகள் இருக்கிறார்கள்… என்கூட வேலை பார்த்தவங்க அப்படி சொன்னது இல்லை”: நித்யா மேனன் சுளீர்

திருவனந்தபுரம்: மலையாள முன்னணி நடிகை நித்யா மேனன், மல்லுவுட் ரசிகர்களின் தேவதையாக வலம் வருகிறார்.

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' படத்தில் ஷோபனா கேரக்டரில் கலக்கியிருந்தார் நித்யா மேனன்.

இந்நிலையில், தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்துள்ளார் நடிகை நித்யா மேனன்.

ரசிகர்களின் பெஸ்ட்டி நித்யா மேனன்

ரசிகர்களின் பெஸ்ட்டி நித்யா மேனன்

மலையாளத்தில் 2008ம் ஆண்டு வெளியான 'ஆகாஷ கோபுரம்' படம் மூலம் நாயகியாக அறிமுகமான நித்யா மேனன், குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கினார். அவர் நடிக்கும் படங்களில் எல்லாம், நித்யா மேனனின் பாத்திரங்கள் தனித்துவத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதேபோல், நித்யா மேனனின் க்யூட்டான நடிப்பால், ரசிகர்கள் அவரை தங்களது பெஸ்டியாக மனதுக்குள் கொண்டாடுவதும் உண்டு.

தமிழ் ரசிகர்களின் பெஸ்டி ஷோபனா

தமிழ் ரசிகர்களின் பெஸ்டி ஷோபனா

மலையாளத்தில் உஸ்தாத் ஹோட்டல், பெங்களூரு டேய்ஸ், 100 டேய்ஸ் ஆஃப் லவ் ஆகிய படங்களும், தமிழில் வெப்பம், ஓகே கண்மணி, மெர்சல் போன்ற படங்களிலும் நித்யா மேனனின் கேரக்டர் அருமையான பெஸ்டியை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கியது. அதேபோல், தற்போது வெளியான திருச்சிறம்பலம் படத்தில், தனுஷின் பெஸ்டியாக ஷோபனா என்ற கேரக்டரில் நடித்து செம்மையாக ஸ்கோர் செய்திருப்பார்.

திமிர் பிடித்தவள் இல்லை

திமிர் பிடித்தவள் இல்லை

தெலுங்கில் நித்யா மேனன் நடித்திருந்த 'பீம்லா நாயக்' படம், பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில், நீண்ட இடைவேளைக்குப் பின்னர் அவர் தமிழில் நடித்துள்ள 'திருச்சிற்றம்பலம்', சூப்பர் கம்பேக் கொடுத்துள்ளது. இதனிடையே நித்யா மேனன் குறித்து அதிகமான வதந்திகள் வந்தவண்ணம் உள்ளன. முதலில் அவருக்கு திருமணம் என செய்திகள் வெளியாகின. இப்போது அவர் ரொம்பவும் திமிர் பிடித்தவர் என்ற செய்தி வைரலானது. இதுகுறித்து மனம் திறந்துள்ள நித்யா மேனன், "நான் திமிர் பிடித்தவள் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

எல்லாம் எதிரிகளின் வேலை

எல்லாம் எதிரிகளின் வேலை

அதாவது, "திரைத்துறையில் பலரும் நான் திமிர் பிடித்தவர் என நினைக்கின்றனர், அது உண்மையில்லை. எனது வளர்ச்சியை பிடிக்காத சிலர் இப்படியெல்லாம் வதந்திகளை பரப்புகின்றனர். திரையுலகில் எனக்கு நிறைய எதிரிகள் இருக்கின்றனர். அவர்கள் தான் இதற்கெல்லாம் காரணம். என்னுடன் வேலை பார்த்தவர்களுக்கு நான் எப்படியென்று நன்றாகத் தெரியும். அவர்கள் யாரும் என்னை திமிர் பிடித்தவள் என சொன்னதில்லை" எனக் கூறியுள்ளார். நித்யா மேனனின் இந்த பதில், அவரது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X