Nithya Menon: தமிழ்ல நித்யா மேனனுக்கு பிடித்த நடிகர் யார் தெரியுமா.. அவங்களே சொன்ன விஷயம்!

சென்னை: தென்னிந்திய மொழிப் படங்களில் சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருபவர் நித்யா மேனன்.சமீபத்தில் தமிழில் தனுஷுடன் இணைந்து திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தார் நித்யா மேனன்.

நடிப்பு ராட்சசி என்று புகழப்படும் நித்யா மேனனுக்கு திருச்சிற்றம்பலம் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது.

Actress Nithya Menon hails Actor Surya and she wants to act with him again

நித்யா மேனனுக்கு தமிழில் பிடித்த நடிகர்: தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருபவர் நித்யா மேனன். பாலிவுட்டிலும் அக்ஷய் குமாருடன் மிஷன் மங்கள் படத்தில் நடித்துள்ள நித்யா மேனன், அபிஷேக் பச்சனுடன் ப்ரீத் இன் டு த ஷேடோஸ் வெப் தொடரிலும் நடித்துள்ளார். தற்போது விஷால் ரஞ்சன் மிஸ்ரா இயக்கத்தில் மர்டர் மிஸ்ட்ரி என்ற படத்திலும் அவர் கமிட்டாகியுள்ளார். விவேக் ஓபராய், உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.

ஒரு கொலையை சுற்றி நடக்கும் கதைக்களத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் ஸ்காட்லாந்தில் நடந்து வருகிறது. தொடர்ந்து 30 நாட்கள் நடைபெறவுள்ள இந்த சூட்டிங்கிற்காக தற்போது நித்யா மேனன் ஸ்காட்லாந்தில் உள்ளார். சமீபத்தில் தனுஷுடன் நித்யா மேனன் இணைந்து நடித்திருந்த திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது. படத்தில் தனுஷுடன் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்திருந்தார் நித்யா மேனன்.

தமிழில் காஞ்சனா 2, மெர்சல், 24, ஓகே கண்மணி என இவரது வெற்றிப்படங்களின் நீளம் அதிகம். தற்போது மலையாளம், தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார் நித்யா மேனன். வரும் செப்டம்பர் 28ம் தேதி அவரது நடிப்பில் குமாரி ஸ்ரீமதி தொடர் அமேசான் தளத்தில் வெளியாகவுள்ளது. இதையொட்டிய பிரமோஷன்களில் அவர் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் தமிழ் படத்தின் ஹீரோ ஒருவர் தன்னிடம் அத்துமீறியதாக அவர் கூறியுள்ளார்.

தெலுங்குப் படவுலகில் தான் அதிகமான படங்களில் நடித்துள்ள போதிலும் இத்தகைய அனுபவத்தை தான் பெறவில்லை என்றும் தமிழில் இதுபோன்ற மோசமான அனுபவம் தனக்கு கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். அந்த ஹீரோ யார் என்பதை நித்யா மேனன் வெளிப்படையாக கூறாத நிலையில், இந்த பேட்டி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழில் தனக்கு பிடித்த நடிகர் சூர்யா என்றும் நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் தனக்கு அதிகமான நண்பர்கள் உள்ளதாகவும் தனக்கு இத்தகைய நண்பர்களுடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் பிடிக்கும் என்றும் நித்யா மேனன் கூறியுள்ளார். இதுதான் தனக்கு மகிழ்சசியை கொடுப்பதாக தெவித்துள்ள நித்யா மேனன், குறிப்பாக நடிகர் சூர்யாவுடன் இணைந்து பணியாற்றியது தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் அவர் மிகவும் சிறந்த நபர் என்றும் அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்ற தான் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X