Nithya Menon: விஜய் போன்ற நடிகர்களுடன் நடிப்பது மிகவும் சுலபம்.. நித்யா மேனன் பளீச்!
சென்னை: நடிகை நித்யா மேனன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மட்டுமில்லாமல் இந்தியிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த 2006ம் ஆண்டில் கன்னட மொழியில் நாயகியாக நடித்து அறிமுகமான நித்யா மேனன், தொடர்ந்து தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
விஜய், சூர்யா, தனுஷ், ராகவா லாரன்ஸ், துல்கர் சல்மான், உள்ளிட்ட நடிகர்களுடன் தமிழில் நடித்துள்ள நித்யா மேனனுக்கு சமீபத்தில் தனுஷுடன் நடித்து வெளியான திருச்சிற்றம்பலம் படம் சிறப்பாக அமைந்தது.

விஜய் போன்ற நடிகர்களுடன் நடிப்பது மிகவும் சுலபம் என நித்யா மேனன் பாராட்டு: நடிகை நித்யா மேனன் கடந்த 2006ம் ஆண்டில் கன்னடத்தில் நாயகியாக அறிமுகமானவர். தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் நடித்துவரும் நித்யா மேனன் பாலிவுட்டிலும் அக்ஷய் குமார் உள்ளிட்ட ஹீரோக்களுடன் நடித்துள்ளார். சிறந்த பாடகியாகவும் உள்ள இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். தற்போது மர்டர் மிஸ்டரி என்ற பாலிவுட் படத்தின் சூட்டிங்கிற்காக சுவிட்சர்லாந்தில் உள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் அங்கு தொடர்ந்து 30 நாட்கள் நடக்கவுள்ளது.
முன்னதாக அக்ஷய் குமார், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் ஹீரோக்களுடன் படங்கள், வெப் தொடர்களில் நடித்துள்ள நித்யா மேனன் நடிப்பில் சமீபத்தில் தமிழில் திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி அவருக்கு சிறப்பாக அமைந்தது. தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் இந்தப் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து நித்யா மேனனுக்கு மிகவும் சிறப்பாக கைக்கொடுத்தது.
தற்போது பாலிவுட்டில் மட்டுமில்லாமல் சில மலையாள படங்களிலும் நடித்து வருகிறார் நித்யா மேனன். அடுத்ததாக அவரது நடிப்பில் உருவாகியுள்ள குமாரி ஸ்ரீமதி வெப்தொடர் வரும் செப்டம்பர் 28ம் தேதி அமேசான் தளத்தில் வெளியாகவுள்ளது. இதையொட்டி அவர் கொடுத்துள்ள பேட்டியொன்றில் தெலுங்குப்படவுலகம் மிகவும் பாதுகாப்பானது என்றும் தமிழில் ஒரு படத்தின் ஹீரோ தன்னிடம் அத்துமீறியதாகவும் தெரிவித்துள்ளார்.
விஜய்யுடன் இணைந்து மெர்சல் படத்தில் நடித்திருந்தார் நித்யா மேனன். இந்தப் படத்தில் அவர்கள் இருவரது கெமிஸ்ட்ரி மிகவும் சிறப்பாக அமைந்தது. இந்நிலையில், நடிகர் விஜய் மிகவும் அமைதியான நபர் என்று பாராட்டு தெரிவித்துள்ள நித்யா மேனன், சூட்டிங் ஸ்பாட்டில் மற்றவர்கள் வேலைகளில் அவர் அதிகமாக தலையிட மாட்டார் என்று கூறியுள்ளார். விஜய் அமைதியான நடிகர் என்றும் பாராட்டியுள்ளார் நித்யா மேனன்.
சில நடிகர்கள் அதிகமான கர்வத்துடன் காணப்படும் நிலையில், விஜய் எப்போதும் இயல்பாக இருப்பவர் என்றும் இதுபோன்ற நபர்களுடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் எளிமையானது என்றும் நித்யா மேனன் தெரிவித்துள்ளார். மெர்சல் படத்தில் விஜய்க்கு ஜோடியாக இரண்டு குழந்தைகளின் தாயாக நடித்திருந்தார் நித்யா மேனன். இந்த காரணத்திற்காகத்தான் நடிகை ஜோதிகா இந்த படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்திருந்தார். ஆனால் நடிப்பை நடிப்பாகவே எடுத்துக் கொண்டுள்ள நித்யா மேனன், இந்த கேரக்டரில் நடித்து அதிகப்படியான வரவேற்பை பெற்றிருந்தார்.


Click it and Unblock the Notifications











