அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்…பவன் கல்யாணுடன் இணையும் நித்யா மேனன் !

சென்னை : அய்யப்பனும் கோஷியும் தெலுங்கில் ரீமேக்காக உள்ளது, இதில் பவன் கல்யாண், ராணா நடிக்கிறார்கள்.

பவன் கல்யாணுக்கு ஜோடியாக நித்யா மேனன் முதன்முறையாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 12ந் தேதி முதல் தொடங்க உள்ளது.

வெற்றி

வெற்றி

மலையாளத்தில் வெளியாகி வெற்றிப்பெற்றத் திரைப்படம் தான் அய்யப்பனும் கோஷியும். அய்யப்பனுக்கும்.... கோஷிக்கும் இடையே நடக்கும் ஈகோ சண்டை படம் முழுக்க இருந்து படத்தை மெறுகேற்றி இருக்கும். இத்திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீ மேக்காக உள்ளது.

தெலுங்கில் ரீமேக்

தெலுங்கில் ரீமேக்

தெலுங்கில் ரீமேக்காகும் படத்தில் பவன் கல்யாண், ராணா நடிக்கிறார். இதில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். ராணாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இவர் அல்லு அர்ஜூனின் புஷ்பா படத்தில் அவருக்கு சகோதரியாக நடித்து வருவதால் கால்ஷீட் கிடைக்குமா என்பது தெரியவில்லை.

பவன் கல்யாண்

பவன் கல்யாண்

சாகர் கே சந்திரா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 12ந் தேதி முதல் தொடங்க உள்ளது. மேலும் தெலுங்கு கதைக்கு ஏற்றால் போல சில காட்சிகள் மாற்றப்பட்டுள்ளன. நித்யாமேனன் முதன்முறையாக பவன் கல்யாணுடன் நடிக்க உள்ளார்.

ஆந்தாலஜி

ஆந்தாலஜி

தற்போது நித்யா மேனன் கொலம்பி என்ற மலையாளத் திரைப்படத்திலும், நவரசா என்ற ஆந்தாலஜியில் நடித்து வருகிறார். மேலும் அப்பாவின் மீசை என்ற தமிழ் திரைப்படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகி உள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் உருவான சைக்கோ படத்திற்கு பிறகு இவர் தமிழில் நடிக்கவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X