நித்யா மேனனுக்கு தகுதி இல்லைனு சொன்ன சாய் பல்லவி ரசிகர்கள்.. தேசிய விருதுடன் ஃபோட்டோவை இறக்கி கெத்து

கொச்சி: நடிகை நித்யா மேனன் தமிழ் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவிலேயே மிகவும் முக்கியமான நடிகையாக உள்ளார். தான் நடிக்கும் கதாபாத்திரத்தில் அவரை விட வேறு யாராலும் சிறப்பாக நடித்துக் கொடுக்க முடியாது என ரசிகர்கள் பாராட்டும் அளவிற்கு திறமையான நடிகை. இவருக்கு கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இந்நிலயில் அந்த விருதுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நித்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் திருச்சிற்றம்பலம். இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இந்தப் படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. இதுமட்டும் இல்லாமல், விமர்சன ரீதியாகவும் பாராட்டைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் ஷோபனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக நித்யா மேனனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. கடந்த வாரமே தேசிய விருதினைப் பெற்றுக் கொண்ட நித்யா மேனன், இன்று அதாவது அக்டோபர் 18ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேசிய விருதுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.

nithya menon dhanush thiruchitrambalam

மேலும் அந்தப் பதிவில் அவர் எழுதியுள்ளது, " மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் ஆசீர்வாதங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்தவொரு நடிகருக்கும் நடிகைக்கும், அவர்கள் நடித்த ஒரு சில பாத்திரங்கள் அவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான பகுதியாக மாறும். அத்தகைய கதாபாத்திரங்கள் ஏற்படுத்திய தாக்கத்தினை காலத்தால் அழிக்க முடியாது. அவை என்றைக்கும் மக்களின் இதயங்களில் புதிதுபோல இருக்கும். அப்படி எனக்கு மக்கள் மனங்களில் இருந்து என்னைப் பிரிக்க முடியாத நடிகையாக மாற்றியது 'ஷோபனா'தான்.

nithya menon dhanush thiruchitrambalam

ஷோபனா: இந்தப் படம் பெரும் வெற்றி பெற காரணமான தயாரிப்பாளர்கள் - சன் பிக்சர்ஸ் மற்றும் கலாநிதி மாறன் ஆகியோருக்கு நன்றி.
இயக்குநர் மித்ரன் ஆர் ஜவஹரின் படங்களை நான் எப்போதும் ரசிக்கிறேன், ஏனெனில் அவை எப்போதும் ஃபீல்-குட் உணர்வுகளை ஏற்படுத்தக்கூடியது. 'ஷோபனா' கதாபாத்திரத்தில் நடிக்க என்னைத் தேர்வு செய்ததற்காக பாக்கியமாக உணர்கின்றேன். அதை என்றென்றும் மறக்கமாட்டேன்.

nithya menon dhanush thiruchitrambalam

தனுஷ்: 'பழம்' (தனுஷ் கதாபாத்திரம்) இல்லாவிட்டால் இந்தக் (ஷோபனா) கேரக்டர் சாதாரணமாகவும், உற்சாகமில்லாததாகவும் இருந்திருக்கும் - நம்ம திருச்சிற்றம்பலம் ஜூனியர் தனுஷ் கொடுத்த சப்போர்ட்டுக்கு நன்றி. பாரதிராஜா சார் அவர்களுக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. அவருடைய திரையுலகப் அனுபவம், ஈடு இணையற்ற நடிப்பும் எனது கதாபாத்திரத்தையும் படத்தையும் மிளிரச் செய்தது. உங்களுடைய இயக்கத்தில் இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் இணை நடிகராக இருந்தாலும், உங்களுடன் பணியாற்றியதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

nithya menon dhanush thiruchitrambalam

நன்றி: எனது நீண்டகால நண்பர் மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு நன்றி. இந்தப் படத்தின் மூலம் எனக்குக் கிடைத்திருக்கக்கூடிய சிறந்த இரண்டு பெண் இணை நடிகைகளான ராஷிக்கும் பிரியாவுக்கும் நன்றி. என் மீதான உங்கள் அப்பட்டமான அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. எல்லாவற்றிற்கும் மேலாக மிகவும் அழகான மனிதர்களாக இருப்பதற்காகவும் உங்களுக்கு நன்றி. படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் அவர்களுக்கும் நன்றி.

nithya menon dhanush thiruchitrambalam

சாய் பல்லவி ரசிகர்கள்: இந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் மற்றும் நடிப்பிற்காக அன்பையும், ஆதரவையும், பாராட்டுகளையும் பொழிந்த ரசிகர்களுக்கும், பத்திரிக்கை-ஊடகத் நண்பர்களுக்கும் நன்றி. என்னால் உங்களுடன் பேச முடியாமல் போகலாம், ஆனால் உங்களின் அழகான செய்திகளும் அங்கீகார வார்த்தைகளும் என் முகத்தில் புன்னகையை ஏற்படுத்தியது. என் மீது உங்களின் தூய்மையான மற்றும் உண்மையான பாசத்திற்கு நன்றி. இந்த விருது கிடைத்ததற்காக நான் நன்றியுடன் இருப்பேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரமே, நித்யா மேனன் விருது வாங்கிய நிலையில், இப்போது அதனைப் பகிர்ந்திருக்க காரணம், நடிகை சாய் பல்லவியின் ரசிகர்கள் நித்யா மேனனுக்கு தேசிய விருதுக்கான தகுதி இல்லை எனக் கூறியததால்தான் இப்போது பகிர்ந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X