தேசிய விருதுக்கு நான் தகுதியானவள் இல்லையா? சாய் பல்லவியை அட்டாக் செய்த நித்யா மேனன்.. என்ன நடந்தது?
கொச்சி: நடிகை நித்யா மேனன், தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாக்களில் மிகவும் கவனிக்கப்படும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். இதுமட்டும் இவர் தனக்கு கொடுக்கும் கதாபாத்திரங்களில் 100 சதவீதத்தினை வெளிக்கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் போட்டு ரசிகர்களை பிரமிக்கச் செய்துவிடுவார். தனுஷ் உடன் இவர் நடித்திருந்த திருச்சிற்றம்பலம் படம் பெரும் பாரட்டைப் பெற்றது. இதுமட்டும் இல்லாமல், இந்தப் படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருதும் அறிவிக்கப்பட்டது. இந்த தேசிய விருதினை கடந்த வாரத்தில் குடியரசுத் தலைவரிடம் பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில் நித்யா மேனன் நடித்த திருச்சிற்றம்பலம் படம் ஒரு கமர்ஷியல் படம். இந்தப் படத்தினை ஒரு கலைப்படடைப்பு எனக் கூறிவிடமுடியாது. மேலும் நித்யா மேனன் ஏற்று நடித்த கதாபாத்திரம் ஒரு ஜாலியான கதாபாத்திரம் அதனை யாருவேண்டுமானாலும் நடிக்கலாம்.

ஆனால் சாய் பல்லவி நடிப்பில் வெளியான கார்கி படம் அப்படி கிடையாது. அந்தப் படம் சமூக அக்கறை கொண்ட படம். அந்தப் படத்தில் மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்திருப்பார். படம் சமூகத்திற்கு தேவையான ஒருபடம். சாய் பல்லவிக்குத்தான் தேசிய விருது அளிக்கப்பட்டிருக்க வேண்டும். நடுவர்கள் குழு சாய் பல்லவியின் படத்தினை வேண்டுமென்றே புறக்கணித்துவிட்டார்கள் என சாய் பல்லவி ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வந்தனர்.

அட்டாக்: இது தொடர்பாக நித்யா மேனன் தனது கருத்தினை முன் வைத்துள்ளார். மேலும் நித்யா மேனனின் கருத்து சாய் பல்லவியின் ரசிகர்களுக்கு அளிக்கும் பதிலடியாக இல்லாமல், சாய் பல்லவியை அட்டாக் செய்வது போல் இருப்பதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். சாய் பல்லவியின் ரசிகர்களின் கருத்துக்கு பதில் அளிக்கையில், " நான் தேசிய விருதுக்கு தகுதியற்றவள் என பலர் கூறுகின்றனர்.

ஆனால் தேசிய விருதுக்கு தகுதியான நடிப்பினை நான் வெளிப்படுத்தியுள்ளதால்தான் எனக்கு விருது கொடுக்கப்பட்டுள்ளது. நான் நடித்த கதாபாத்திரம் அழுகின்ற, சோகமாக இருக்கின்ற அல்லது அவற்றை ஏற்படுத்துகின்ற கதாபாத்திரமாக இல்லாமல் இருக்கலாம். மேலும் அழுவது, சோகமாக இருப்பது போன்ற கதாபாத்திரங்களை யார் வேண்டுமானலும் நடிக்கலாம்.

கவனம்: ஆனால் நான் மிகவும் ஜாலியான கதாபாத்திரங்களில் நடிக்கவே அதிகம் விரும்புகின்றேன். ஏனென்றால் அவற்றில்தான் மிகவும் இயல்பான நடிப்பைக் கொண்டுவருவது சவாலாக இருக்கும். அப்படிப் பார்த்தால், திருச்சிற்றம்பலத்தில் நான் ஏற்று நடித்த ஷோபனா கதாபாத்திரம் அப்படியானதுதான். மேலும் ஒரு படத்தினைத் தேர்வு செய்யும்போதே நான் மிகவும் கவனமாக இருப்பேன். அந்தப் படத்தினைப் பார்த்துவிட்டு மக்கள் மகிழ்ச்சியாக வீடு திரும்ப வேண்டும். எக்காரணம் கொண்டும் அழுதுகொண்டு வரக்கூடாது. அனைவருக்கும் ஃபீல் குட் அனுபவத்தைக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் நான் கதைகளைத் தேர்வு செய்கின்றேன்" எனக் கூறியுள்ளார்.

இட்லி கடை: நித்யா மேனனின் இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இவரது பேச்சுக்கு என்ன பதில் கொடுப்பது எனத் தெரியாமல் சாய் பல்லவியின் ரசிகர்கள் கொஞ்சம் கப்சிப் மோடில் உள்ளனர் என்றே கூறவேண்டும். நித்யா மேனன் தற்போது தமிழில் இட்லி கடை என்ற படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்தப் படத்தினை நடிகர் தனுஷ் இயக்குகின்றார். அவரது இயக்கத்தில் உருவாகும் நான்காவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











