புது யூடியூப் சேனல்… ரசிகர்களை அன்புடன் அழைக்கும் நித்யாமேனன்
கேரளா : தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வைத்து இருப்பவர் நடிகை நித்யா மேனன்.
தனது அற்புதமான நடிப்பால் பல கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தவர்.
தற்போது அவர் யூடியூபில் தனக்கென ஒரு சேனலை துவக்கியுள்ளார்.

கதாபாத்திரம் முக்கியம்
180, வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, ஓகே கண்மணி, இருமுகம், மெர்சல் போன்ற தமிழ் படங்களின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆனவர் நடிகை நித்யா மேனன். நட்சத்திரமாக இல்லாமல் ஒரு நல்ல நடிகையாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டு இருப்பவர். ஆரம்பத்தில் கதாநாயகியாக பல படங்களில் நடித்திருந்தாலும், பிற்பகுதியில் பல படங்களில் இரண்டாவது கதாநாயகியாகவே நடித்து வருகிறார். இரண்டாவது கதாநாயகியாக இருந்தாலும் அலட்டிக்கொள்ளாமல் தனக்குத் கொடுக்கப்படும் கதாபாத்திரத்தில் சரிவர நடித்து வருகிறார். இதனால் பல முன்னணி இயக்குனர்களின் முதல் சாய்ஸாக இவர் இருக்கிறார்.

ஆரம்ப காலம்
நித்யா மேனன் தனது சினிமா வாழ்க்கையை குழந்தை நட்சத்திரமாக " The monkey who know too much " எனும் ஆங்கில படத்தின் மூலம் தொடங்கினார். 1998ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் நடிகை தபுவின் தங்கையாக இவர் நடித்துள்ளார். 17 ஆவது வயதில் நடிகையாக துணை கதாபாத்திரத்தில் ஒரு கன்னடப் படத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு கதாநாயகியாக மலையாளத்தில் ஆகாச கோபுரம் ( 2008 ) தெலுங்கில் " Ala modalaindhi " மற்றும் தமிழில் " 180 " படங்களின் மூலம் தென்னிந்தியா முழுவதும் அறிமுகமாகி ஒட்டுமொத்த ரசிகர்களிடமும் நல்ல நடிகை என பெயர் வாங்கினார். 2019ஆம் ஆண்டு 'மிஷன் மங்கள்' எனும் இந்தி படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார் நித்யா மேனன்.

முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்தவர்
நடிகையாக அறிமுகமாகி தற்போது வரை பல தென்னிந்திய படங்களில் நடித்தவர் நடிகை நித்யா மேனன். இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் மொழிகளில் இருக்கும் பல முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடன் சேர்ந்து பணியாற்றியுள்ளார். சந்தோஷ் சிவன் இயக்கத்தில் ' உறுமி ' மணிரத்னம் இயக்கத்தில் ' ஓகே கண்மணி ', மிஷ்கின் இயக்கத்தில் 'சைக்கோ ', அட்லி இயக்கத்தில் மெர்சல் படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதுபோல தமிழில் நடிகர் விஜய், விக்ரம், சூர்யா, தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், நடிகர் நானி, அல்லு அர்ஜுன், மலையாளத்தில் பெரும்பாலான கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நித்யா மேனன்.

யூடியூப் சேனல்
சினிமாவில் இருக்கும் பல நடிகைகள் நடிகர்கள் தங்களுக்கான ஒரு யூடியூப் சேனல் துவங்கி அதில் தங்களைப்பற்றி நிகழ்வுகளை தொடர்ந்து அப்டேட் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை நித்யா மேனன் தனது பெயரில் ஒரு புதிய யூடியூப் சேனலை துவக்கியுள்ளார். தான் துவங்கியுள்ள யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யும்படி காரில் பயணம் செய்து கொண்டு ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார். " Guys எனது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள், முதலில் அதட்டும் தொனியில் பேசிய பிறகு தன்மையாக " எனது யூடியூப் சேனல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள். பெல் பட்டனை அழுத்துங்கள். என சிரிப்பு பொங்க க்யூட்டாக ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். Nithya menen " என பெயரிடப்பட்டுள்ள இந்த யூடியூப் சேனல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











