போலீசில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்.. எல்லாமே நடிப்பா கோபால்.. உண்மையான காரணம் இதுதான்!

சென்னை: நடிகை நிவேதா பெத்துராஜ் போலீசிடம் சிக்கி வாக்குவாதம் செய்வது போல நேற்று ஒரு வீடியோ இணையத்தில் வெளியானது. அதில், கார் டிக்கியை திறக்கமாட்டேன் என்று போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். அந்த வீடியோ உண்மை இல்லை என்கிற தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

மதுரையை பூர்வீகமாக கொண்ட நடிகை நிவேதா பெத்துராஜ், துபாயில் சென்று செட்டில் ஆனார். அவருக்கு மாடலிங் மற்றும் கார் ரேசிங் உள்ளிட்டவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவராக இருக்கிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு நாள் கூத்து திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலிருந்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். அந்த படத்தில் இடம் பெற்ற அடியே அழகே... பாடல் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

Nivetha pethuraj video

நடிகை நிவேதா பெத்துராஜ்: முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், டிக் டிக் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தார். இவர் உதயநிதி ஸ்டாலினுடன் கிசுகிசுக்கப்பட்டு பல சர்ச்சைகளில் சிக்கி அதற்கு விளக்கமும் கொடுத்திருந்தார். தற்போது தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான 'சொப்பன சுந்தரி' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார்.

போலீசாரிடம் வாக்குவாதம்: நேற்று முன் தினம் நிவேதா பெத்துராஜ், போலீசாரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியானது. அதில். போலீசார் நிவேதா பெத்துராஜின் காரை சோதனை இட வேண்டும் என கேட்கின்றனர். ஆனால், அதற்கு அனுமதி தர மறுத்த நிவேதா பெத்துராஜ் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்த போலீசாரின் போனை அடாவடி செய்து தட்டி உடைகிறார். அந்த காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்று இருந்தது. இந்த வீடியோ வைரலானது.

Nivetha pethuraj video

எல்லாமே நடிப்பா: இந்த வீடியோவில் போலீசார் காலில் செருப்பு அணிந்து இருந்ததால், இது ஏதேனும் படத்தின் ப்ரோமஷனுக்காக எடுத்திருக்கலாம் என நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வந்த நிலையில், அந்த வீடியோ பற்றிய உண்மை தற்போது வெளியாகி இருக்கிறது. அது பருவு (Paruvu) என்ற வெப் சீரிஸ் சூட்டிங் ஸ்பாட் வீடியோ என்கிற தகவல் வெளியாகி உள்ளது. காரில் ஒரு பிணத்தை வைத்து அவர் சுற்றுவது போல தான் அந்த தொடரின் கதை இருக்கிறது. இந்த உண்மை தெரிந்ததும் அத்தனையும் நடிப்பா கோபால் என்று ரசிகர்கள் இணையத்தில் கேட்டுவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X