டெலிவரி செய்யப்பட்ட ஃபிரைட் ரைஸில் கரப்பான் பூச்சி.. ஹோட்டல் மீது நடிகை நிவேதா பெத்துராஜ் புகார்!
சென்னை: நடிகை நிவேதா பெத்துராஜ் ஆர்டர் செய்த சாப்பாட்டில் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
தமிழில் ஒருநாள் கூத்து படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.
தொடர்ந்து பொதுவாக என் மனசு தங்கம், டிக்டிக்டிக், திமிர் புடிச்சவன், சங்கத்தமிழன், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கில் கைவசம்
இதேபோல் தெலுங்கிலும் பிஸியாக உளள நிவேதா பெத்துராஜ், முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். தற்போது விரட்ட பர்வம், பாகை, ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவ்
தமிழிலும் பொன் மாணிக்கவேல் மற்றும் பார்ட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை நிவேதா பெத்துராஜ், அவ்வப்போது தனது போட்டோக்கள் மற்றும் தனது படம் தொடர்பான அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறார்.

சாப்பாட்டில் கரப்பான் பூச்சி
இந்நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ் தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் ஒரு போட்டோவை பதிவிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார். அதாவது தான் ஆர்டர் செய்த ஃபிரைட் ரைஸில் கரப்பான் பூச்சி கிடந்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

அதிர்ச்சியில் நடிகை
நடிகை நிவேதா பெத்துராஜ், ஸ்விகி செயலி மூலம் ஓஎம்ஆரில் உள்ள பிரபல உணவகத்தில் உணவு ஆர்டர் செய்துள்ளார். டெலிவரி செய்யப்பட்ட உணவை சாப்பிட பிரித்தப்போது அதில் கரப்பான் பூச்சி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் நிவேதா பெத்துராஜ்,

முதல் முறையல்ல
சாப்பாட்டில் கரப்பான் பூச்சி கிடக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் ஷேர் செய்துள்ள நிவேதா பெத்துராஜ், கரப்பான் பூச்சியுடன் உணவு டெலிவரி செய்யப்படுவது இது முதல்முறையல்ல என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

பரபரப்பு
மேலும் குறிப்பிட்ட உணவகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடிகை நிவேதா பெத்துராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். நடிகை வாங்கிய சாப்பாட்டில் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











