நக்சலைட்டாக மாறும் நிவேதா பெத்துராஜ்… என்ன படம்னு தெரியுமா ?
சென்னை : சாய் பல்லவி மற்றும் ராணா, நந்திதா தாஸ் நடித்துள்ள விரட்ட பர்வம் படத்தில் நிவேதா பெத்துராஜ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதில் பிரியாமணி மற்றும் ஈஸ்வரி ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படத்தை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன.

புரட்சி வீரன்
புரட்சி, வீரம் என 1990 களின் நக்சலைட் இயக்கத்தின் பின்னணியில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், ராணா மற்றும் சாய்பல்லவி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் ஹீரோ ராணாவை விட சாய்பல்லவிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெளியாகி எதிர்பார்ப்பு
புரட்சிகர இலக்கியங்களை எழுதும் நக்சலைட் தலைவராக ராணா டகுபதியின் கதாபாத்திரம் உள்ளது. புயலுக்கு பின் வரும் அமைதியாக, சாய்பல்லவியின் காதல் அமைந்துள்ளது. இப்படத்தின் டீசர் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்று, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிர வைத்துள்ளது.

எதார்த்தமான கதை
ராணா, சாய் பல்லவி மற்றும் நந்திதா தாஸ் கதாபாத்திரங்களுக்கு இடையிலான கருத்து மோதல்கள் படத்தின் முக்கிய கருப்பொருளாக அமைகின்றன. படத்தின் உள்ளடக்கம் குறித்து வெவ்வேறு துறைகளில் இருந்து மாறுபட்ட கருத்துக்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தபோதிலும், இயக்குனர் வேணு உடுகுலா மிகவும் யதார்த்தமான அணுகுமுறையுடன் கதையை விவரித்துள்ளார்.
Recommended Video

லீட்ரோலில்
கேரளா, கரீம்நகர் மற்றும் தெலுங்கானாவின் வாரங்கல் மாவட்டங்களில் விரட்ட பர்வம் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஈஸ்வரி ராவ், பிரியாமணி மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விரட்ட பருவம் சுரேஷ் பாபு தகுபதி மற்றும் சுதாகர் செருகுரி இணைந்து இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர்.

நக்சலைட்டாக
மேலும், இப்படத்தில் ஒரு நாள் ஒரு கூத்து, டிக்டிக் டிக் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நிவேதா பெத்துராஜ் நக்சலைட்டாக நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இத்திரைப்படத்தின் அனைத்துப்பணிகளும் முடிவடைந்து ஏப்ரல் மாதமே திரையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது இப்படத்தை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன.


Click it and Unblock the Notifications











