காதலும் இல்லை..பிரேக்கப்பும் இல்லை..ஆள விடுங்கப்பா..தெறித்து ஓடிய நிவேதா தாமஸ்!

சென்னை : நடிகை நிவேதா தாமஸ் மலையாள நடிகரை காதலிப்பதாக பரவி வரும் வதந்திக்கு நிவேதா தாமஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று ஹீரோயினாக பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் நிவேதா தாமஸ்.

ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு மகளாகவும், விஜய்க்கு தங்கையாகவும் படங்களில் நடித்து பிரபலம் ஆனார்.

நிவேதா தாமஸ்

நிவேதா தாமஸ்

சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த நிவேதா, குருவி படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்து வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர் நவீன சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அதன் பின் இவருக்கு தமிழில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லாததால், டோலிவுட் பக்கம் போன இவருக்கு படங்கள் குவிந்தன. தெலுங்கில் நானியுடன் இவர் நடித்த ஜென்டில்மேன் இவருக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தது.

நண்பர்கள் மட்டுமே

நண்பர்கள் மட்டுமே

இதையடுத்து, நிவேதா நானியுடன் பல படங்களில் ஜோடி போட்டு நடித்திருந்தார். இருவருக்கும் கெமிஸ்டிரி சும்மா மிரட்டலாக இருந்ததால், திரையில் இவர்களின் ஜோடி அனைவருக்கும் பிடித்துப்போனது. இதனால், டோலிவுட் வட்டாரத்தில் இவர்கள் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், நிவேதா நாங்கள் நல்ல நண்பர்கள் என கூறி வந்தார்.

காதல் முறிந்தது

காதல் முறிந்தது

மலையாளப்படங்களில் நடித்து வந்த நிவேதா தாமஸ், மலையாள இளம் நடிகர் ஒருவரை காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் பரவிய நிலையில், இந்த காதல் பிரேக்கப்பாகிவிட்டதாக கூறப்படுகிறது. நிவேதாவின் பெற்றோர் இந்த காதல் சரிப்பட்டு வராது என, காதலுக்கு முட்டுக்கட்டை போட்டதால் நிவேதா காதலை முறித்துக்கொண்டுள்ளார்.

தெறித்து ஓடிய நிவேதா தாமஸ்

தெறித்து ஓடிய நிவேதா தாமஸ்

காதல் விவகாரம் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்த நிவேதா,இப்போது தான் எனக்கு பட வாய்ப்பு வந்து கொண்டு இருக்கிறது. இதனால், நடிப்பின் மீது தான் என் கவனம் உள்ளது. கல்யாணம் குறித்து வரும் தகவல்கள் உண்மையில்லை. காதலும் இல்லை, பிரேக்கப்பும் இல்லை ஆள விடுங்கப்பா சாமி என தெறித்து ஓடி உள்ளார் நிவேதா தாமஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X