உங்க வீட்டுக்கு வந்தா நான்தான் சமைப்பேன்.. ஓகேவா என கேட்ட நடிகை.. ரஜினி ரியாக்ஷன் என்ன தெரியுமா?

சென்னை: தர்பார் இசை வெளியீட்டு விழா மேடையில் ரஜினியிடம், உங்கள் வீட்டிற்கு வந்தால் நான்தான் சமைப்பேன் ஓகேவா என கேட்டதற்கு ரஜினி கொடுத்த ரியாக்ஷன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

ரஜினி - ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகியிருக்கும் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.

நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ், இந்தி நடிகர் சுனில் ஷெட்டி, அனிருத், சந்தோஷ் சிவன், ராகவா லாரன்ஸ், விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

ஸ்பெஷல் வீடியோ

ஸ்பெஷல் வீடியோ

இசை வெளியீட்டு விழாவின் போது மேடையில் ஒளிபரப்பப்பட்ட ஸ்பெஷல் வீடியோவில், விஜய் நடித்த கத்தி, ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

பஞ்ச் டயலாக்குகள்

பஞ்ச் டயலாக்குகள்

இதேபோல் ரஜினியின் பிரபலமான பஞ்ச் டயலாக்குகள் அடங்கிய வீடியோவும் ஒளிபரப்பப்பட்டன. இதனை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் ரஜினி குறித்து உரையாற்றினர்.

கனவில் கூட நினைக்கவில்லை

கனவில் கூட நினைக்கவில்லை

அதன் ஒரு பகுதியாக தர்பார் படத்தில் நடித்துள்ள நிவேதா தாமஸும் பேசினார். அப்போது தர்பார் படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்திருப்பதாக கூறினார். மேலும் இந்தப்படத்தில் நடிப்பேன் என நான் கனவில் கூட நினைக்கவில்லை.

இனிமே டயலாக்

இனிமே டயலாக்

பல இடங்களில் ஷுட்டிங் நடைபெற்றது. ஆனால் ஒரு காட்சியில் கூட ரஜினி சார் முகம் சுளிக்கவில்லை. அவ்வளவு எனர்ஜி அவருக்கு. ஆண்டவன் சொல்றான் ஆதித்ய அருணாச்சலம் முடிக்கிறான், அதுதான் இனிமே டயலாக் என்ற அவர் மேலும் தொடர்ந்தார்.

நான்தான் சமைச்சு போடுவேன்

நான்தான் சமைச்சு போடுவேன்

நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த ரஜினிகாந்தை பார்த்து "சார் நீங்கள் ஒரு நாள் உங்கள் வீட்டிற்கு என்னை அழைத்துள்ளீர்கள், நான் உங்கள் வீட்டிற்கு வந்தால் நான்தான் உங்களுக்கு சமைச்சு போடுவேன் ஓகே வா" என்று கேட்டார்.

தம்ப்ஸ் அப்

தம்ப்ஸ் அப்

அதற்கு ரஜினிகாந்த் சிரித்துக்கொண்டே தம்ப்ஸ்அப் செய்து ஓகே என்றார். இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஓவென கத்தி ஆரவாரம் செய்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X