திரும்ப திரும்ப கேட்கத் தோனுதே... பாட்டுப்பாடி அசத்திய நிவேதா தாமஸ் !

சென்னை : குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் நிவேதா தாமஸ்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்தி பாடலை அழகாக பாடி உள்ளார். இதை கேட்ட ரசிகர்கள் நிவேதாவுக்கு இப்படி ஒரு திறமை இருக்கா என்று அவரை புகழ்ந்து வருகின்றனர்.

விஜய்யின் தங்கையாக

விஜய்யின் தங்கையாக

விஜய்யுடன் ஜில்லா திரைப்படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது மனதையும் கண்ணீரால் நனைய வைத்த நிவேதா, சமீபத்திலே ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு மகளாக துடிப்பான நடிப்பை வெளிப்படுத்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல பெயரைபெற்றுத்தந்தது.

வசூல்சாதனை

வசூல்சாதனை

ஹிந்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற பிங்க் திரைப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வக்கீல் சாப் என்ற பெயரில் வெளியாகி பாக்ஸ் ஆபிசியில் வெற்றி பெற்றது. மிகப்பெரிய வசூலை வாரிக்குவித்தது. இதில் வரும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நிவேதா தாமஸ்.

கொரிய மொழி படம்

கொரிய மொழி படம்

கொரியன் மொழியில் வெளியான மிட் நைட் ரன்னர்ஸ் என்ற த்ரில்லர் திரைப்படத்தின் தெலுங்கு ரீ மேக்கில் நடித்து வருகிறார். ஷாகினி தாகினி என்ற பெயரில் இப்படம் உருவாக உள்ளது. இதில் ரெஜினாவும் மற்றொரு கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

பாராட்டிய ரசிகர்கள்

சமூக ஊடகத்தில் ஆக்டிவாக இருக்கும் நிவேதா தாமஸ், தனக்கு பாடும் திறமை இருப்பதை உலகிற்கு வெளிப்படுத்தி உள்ளார். இம்ரான் கான் மற்றும் ஜெனெலியா டிசோசா நடித்த ஜானே து யா ஜானே படத்திலிருந்து கபி கபி என்ற பாடலை அழகாக பாடியுள்ளார். அவரின் குரலைக் கேட்டு ரசிகர்கள் வியந்து அவரை பாராட்டி வருகின்றனர்.

கேமராவை உடைத்தார்

கேமராவை உடைத்தார்

சமீபத்தில் இவர் கிரிக்கெட் விளையாடிய வீடியோவை பகிர்ந்து இருந்தார். அந்த வீடியோவில் கிரிக்கெட் விளையாடி வேகமாக பந்தை அடித்து வீட்டிலிருந்த கேமராவை உடைத்திருந்தார். இது இணையத்தில் மிகவும் வைரலானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X