மூக்கை உடைத்த ரசிகர்கள்.. கொட்டிய ரத்தம்.. மேடையில் கதறி அழுத பிரபல நடிகை.. வைரலாகும் வீடியோ!

ரசிகர்கள் தாக்கியதில் பிரபல மலையாள நடிகை நூரின் ஷெரீப்புக்கு மூக்கில் காயம் ஏற்பட்டது.

Recommended Video

Noorin Shereef at Manjeri Veemart Inaguration

மலபுரம்: தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மலையாள நடிகை நூரின் ஷெரீப் ரசிகர்களால் தாக்கப்பட்டு கதறி அழும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஒரு அடார் லவ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நூரின் ஷெரீப். இந்த படம் வெளியாவதற்கு முன்னர் பிரியா பிரகாஷ் வாரியர் தான் பிரபலமாக இருந்தார். புருவங்களை உயர்த்தி கண்கடிக்கும் அவரது வீடியோ மிகப்பெரிய வைரலானது.

ஆனால் ஒரு அடார் லவ் படம் வெளியான பிறகு நூரின் ஷெரீப் தான் பெரிதும் பேசப்பட்டார். படத்தில் அவரது நடிப்பும், கதாபாத்திரமும் இளைஞர்கள் மனதை கொள்ளைக்கொண்டது. இதனால் பிரியாவை காட்டிலும், அதிக பட வாய்ப்புகளை பெற்றார் நூரின் ஷெரீப்.

ஜாலியான பெண்

ஜாலியான பெண்

திரையில் மட்மில்லாமல் நிஜத்திலும் நூரின் ஷெரீப் ஒரு துடிப்பான பெண். பசங்களை போல் பைக் ஓட்டுவது, துறுதுறுவென ஏதாவது சேட்டை செய்வது, ஆண் நண்பர்களுடன் சகஜமாக ஊர் சுற்றுவது என மிகவும் ஜாலியான கேரக்டர் கொண்டவர் அவர்.

ரசிகர்கள் ரகளை

ரசிகர்கள் ரகளை

இந்நிலையில் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மஞ்சேரி எனும் இடத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் நூரின் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்கு அவர் தாமதமாக வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடுப்பான ரசிகர்கள், நூரின் ஷெரீப் வந்தபோது ரகளையில் ஈடுபட்டனர்.

மூக்கு உடைந்தது

மூக்கு உடைந்தது

அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு ரசிகரின் கை நூரினின் மூக்கில் பலமாக பட்டது. இதனால் அவரது மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. வலி தாங்க முடியாமல் மேடையிலேயே நூரின் கதறி அழுதார்.

தாமதம் ஏன் ?

தாமதம் ஏன் ?

பிறகு வலியை பொறுத்துக்கொண்டு விழாவில் அவர் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்கு தான் தாமதமாக வரவில்லை என்றும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூட்டம் அதிகமாக கூட வேண்டும் என்பதற்காக, தன்னை அருகில் உள்ள ஓரு ஓட்டலில் 2 மணி நேரம் காத்திருக்க வைத்ததாகவும் நூரின் விளக்கம் அளித்தார்.

கடுமையான வலி

கடுமையான வலி

ரசிகர்கள் தாக்கியதில் நூரினின் மூக்கில் லேசான காயம் தான் ஏற்பட்டது. ஆனால் வலி கடுமையாக இருந்ததால் தான் அவர் கதறி அழுதுவிட்டதாக, நூரினின் தாய் கூறியுள்ளார். நிகழ்ச்சிக்கு நூரின் வந்தபோது, சிலர் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வைரலாகும் வீடியோ

நூரின் தாக்கப்பட்ட இந்த சம்பவத்தை ரசிகர்கள் சிலர் தங்களுடைய செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அத்துமீறும் ரசிகர்கள்

அத்துமீறும் ரசிகர்கள்

பொது நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வரும் நடிகர், நடிகைகள் பல்வேறு சங்கடங்களை சந்தித்து வருகின்றனர். நடிகர், நடிகைகளிடம் ரசிகர்கள் அத்துமீறுவது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது என்பதற்கு நூரின் ஷெரீப் தாக்கப்பட்ட சம்பவம் ஒரு உதாரணம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X