நடிகையும் திரிணாமுல் காங். எம்பியுமான நுஸ்ரத் ஜஹான் துணிக்கடை அதிபருடன் திருமணம்: வைரலாகும் பிக்ஸ்!

மும்பை: பிரபல நடிகையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியுமான நுஸ்ரத் ஜஹான் தொழிலதிபர் நிகில் ஜெயினை நேற்று திருமணம் செய்து கொண்டார்.

29வயதான பெங்காலி நடிகை நுஸ்ரத் ஜஹான். இவர் நடந்து முடிந்த 17வது மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில் இவர் தனது காதலரான துணிக்கடை தொழிலதிபர் நிகில் ஜெயினை நேற்று திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் துருக்கி நாட்டில் உள்ள போட்ரம் நகரில் நடைபெற்றது.

துருக்கிக்கு பறந்த குடும்பம்

துருக்கிக்கு பறந்த குடும்பம்

இந்த திருமண நிகழ்ச்சியில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். இதற்காக கடந்த 16ஆம் தேதியே அவர்கள் போட்ரம் நகருக்கு பறந்துவிட்டனர்.

மணமக்களின் ஆடை

மணமக்களின் ஆடை

திருமணத்தில் நடிகையும் எம்பியுமான நுஸ்ரத் சிவப்பு நிற லெஹாங்கா ஆடை அணிந்திருந்தார். இந்த ஆடையை பேஷன் குரு சப்யாசச்சி முகர்ஜி வடிவமைத்திருந்தார். மணமகனின் ஆடையையும் அவரே வடிவமைத்திருந்தார்.

பலரும் வாழ்த்து

பலரும் வாழ்த்து

இந்நிலையில் திருமணம் மற்றும் திருமணத்திற்கு முந்தைய ஹல்தி மற்றும் மெகந்தி நிகழ்ச்சிகளின் போது எடுக்கப்பட்ட போட்டோக்களை நுஸ்ரத் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அழகு தேவதையாக ஜொலிக்கும் நுஸ்ரத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மிமி சக்கரவர்த்தி பங்கேற்பு

மிமி சக்கரவர்த்தி பங்கேற்பு

திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கு துருக்கி மற்றும் இந்திய ஸ்பெஷல் உணவுகள் பரிமாறப்பட்டன. இந்த திருமணத்தில் பெங்காலி நடிகையும் ஜாதவ்பூர் எம்பியுமான மிமி சக்கரவர்த்தி கலந்துகொண்டார்.

திருமணத்தில் முடிந்த காதல்

திருமணத்தில் முடிந்த காதல்

நுஸ்ரத் ஜஹான் கடந்த ஆண்டு நிகில் ஜெயினின் துணிக்கடைக்கான விளம்பரத்தில் நடித்த போது இருவருக்கும் அறிமுகம் கிடைத்துள்ளது. இந்த அறிமுகம் முதலில் நட்பாகி பின்னர் காதலாகி தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X