தேவதைகளை அழகாக்கிய மூக்குத்தி.. ஜொலிக்கும் நடிகைகள் !
சென்னை : வானம் அழகு தான், நட்சத்திரம் இல்லாத வானம் வெறுமனே தெரியும். நட்சத்திரம் அங்கொன்றும், இங்கொன்றுமாக மின்னும் போதுதான் வானத்தின் அழகு கண்ணை பறிக்கும். அதே போலத்தான் பெண்கள் மூக்குத்தி அணியும் போதும் அவர்களின் அழகும் அவர்கள் மீதான ஈர்ப்பும் கூடும்.
Recommended Video
பெண்கள் அணியும் மூக்குத்தியை பற்றி பல கதைகளும், பல கவிதைகளும் வரலாறும் அமைந்திருக்கிறது. இந்த மூக்குத்தியை நம் தமிழ் நடிகைகள் அணிந்தால் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்!
தமிழ் சினிமாவில் காலெடுத்து வைத்த சில வருடங்களிலேயே பட்டித்தொட்டி எங்கும் ரசிகர்களை தன் வசப்படுத்தினார் சமந்தா. அழகான முகம், தனக்கென தனி ஸ்டைலே அவரின் சிரிப்பு தான். பல இளைஞர்களை கவர்ந்த நாயகியான இவர் மூக்குத்தி அணிந்தால் வெண்ணிலா மின்னும் மூக்குத்தி அணிந்தது போல பிரகாசிக்கும் இவரது முகம்.

மின்னும் மின்மினி
ஆடுகளம் பார்த்த பல இளைஞர்களின் மனதில் ஆட்டம் போட்டவர். அழகென்று வந்துவிட்டால் மெல்லிடையும், சுருண்டை முடியும், புட்டு புட்டு பேசும் தமிழும் அழகுதானே! அக்மார்க் அழகிற்கு மூக்குத்தி அணிந்தால் எப்படி இருக்கும்? இருட்டில் மின்னும் மின்மினி பூச்சி பகலிலும் அவரின் மூக்கில் மின்னுவது போல் இருக்கும். அழகிய தேருக்கு அளவான அச்சாணி வைத்து போல் இருக்கும்.

அழகான புள்ளி
நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோயினாக வலம் வருகிறார்.பல முன்னணி நடிகைகளுக்கு சீனியராக இருந்தாலும், கில்லி தனலட்சுமி இன்னும் வேலு வீட்டின் பொம்மை போலவே அழகாக இருக்கிறார். இவருக்கு மூக்குத்தி அணிந்தால் வேலு மட்டுமில்லை 96 ராம், என்னை அறிந்தால் சத்தியதேவ் அனைவரும் வரிசையில் நிற்பார்கள் அந்த அளவிற்கு கோலத்தில் வைத்த புள்ளி போல் அழகாக இருக்கும்.

இவ்வளவு அழகா
தன் முதல் படத்திலேயே அனைவரின் கண்களையும் திரும்பி பார்க்க வைத்தவர் ஸ்ரேயா! அழகிய தமிழ் மகன், சிவாஜி என முன்னணி ஹீரோக்களின் படத்தில் நடித்தவர். தற்போது திருமணமாகி சினிமாவில் நடிக்காமலிருந்தாலும் இவரின் மவுசு குறையவில்லை. இவருக்கு மூக்குத்தி அணிந்தால் மற்ற நடிகைகளை காட்டியும் வித்தியாசமான அழகுடன் இருப்பார். அவரின் வெள்ளைக்கார கணவரும் ரசிப்பார் ஒரு வளையத்தால் இவ்வளவு அழகா என்று!

அழகு கிளி
தமிழ் சினிமாவில் விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் அழகான பெரிய கண்களால் அனைவரையும் கவர்ந்தவர். துப்பாக்கி படத்தில் மாடர்ன் பெண்ணாகவும், விவேகம் படத்தில் குடும்ப பெண்ணாகவும் வந்தார். இவர் மூக்குத்தி அணிந்தால் ஒரு மாடர்ன் பெண்னான இவர் மூக்குத்தியால் கிராமத்து பெண்ணாக மாறிவிடுவார். அந்த அளவிற்கு கிராமத்து சாயல் படிந்த முகமாக மாறிவிடும் இந்த அழகு கிளியின் முகம்.


Click it and Unblock the Notifications











