ஓணம் வந்தல்லோ.. திருவோணம் வந்தல்லோ.. கேரள பாரம்பரிய உடையில் வாழ்த்து சொன்ன நடிகைகள்!

சென்னை: கேரளாவின் பாரம்பரிய பண்டிகைகளில் முக்கியமானது ஓணம் பண்டிகையாகும். பாதாள உலகில் இருக்கும் மாபலி சக்கரவர்த்தி இந்த நாளில் தான் பூமிக்கு வருவார் என்பது ஐதீகம். அவரை வரவேற்பதற்காக விதவிதமான அத்தப்பூ கோலம் இட்டு, 64 வகையாக ஓணம் சத்தியா விருந்து படைத்து, விளையாட்டு போட்டிகள், ஆட்டம், பாட்டத்துடன் இந்த நாளை கேரள மக்கள் ஒன்றாக கூடி பாரம்பரிய முறையில் இந்த பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்த நாளுக்கு நடிகைகள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

onam actress photos

சாக்ஷி அகர்வால்: அட்லீயின் ராஜா ராணி படத்தின் மூலமாக நடிக்க வந்த சாக்ஷி, முதன் முதலில் கன்னட படங்களில் பணியாற்றி அதன் பிறகு தமிழ் சினிமாவில் நடிக்க வந்தார். அதன் பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். தற்போது கணிசமான படங்களில் நடித்து வரும் சாக்ஷி அகர்வால் ஓணத்திற்கு அட்டகாசமான போட்டோவை ஷேர் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

onam actress photos

மஞ்சிமா மோகன்: சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மஞ்சிமா மோகன், நவரச நாயகன் கார்த்தியின் வீட்டுக்கு மருமகளாக மாறியுள்ளார். நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட மஞ்சிமா மோகன் ஓணம் பாண்டிகைக்கு அழகான போட்டோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

onam actress photos

கௌரி கிஷன்: 96 படத்தில் இளம் வயது திரிஷா ரோலில் நடித்து பிரபலம் ஆனவர் கௌரி கிஷன். 12 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது இந்த படத்தில் அவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் அவரது நடிப்பு நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. இவர் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகின்றார். தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் கௌரி தனது ரசிகர்களுக்கு ஓணம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

onam actress photos

நவ்யா நாயர்: மலையாள நடிகையான நவ்யா நாயர், தமிழில், அழகிய தீயே, ராமன் தேடிய சீதை, ஆடும் கூத்து, மாயக்கண்ணாடி உட்பட சில படங்களில் நடித்துள்ளார். 2010-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலான இவர் அதன் பிறகு சினிமாவில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். தற்போது ஒரு சில படத்தில் நடித்து வரும் இவர் ஓணம் பண்டிகைக்கு பாரம்பரிய உடையில் ஓணம் வாழ்த்து கூறியுள்ளார்.

onam actress photos

சிஜா ரோஸ்: மாலா அக்கா ஐ லவ் யூ என றெக்க படத்தில் வரும் டயலாக் மூலம் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் கட்டி போட்டவர் நடிகை சிஜா ரோஸ். இவர் மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தனது அழகான கண்களால் தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கும் இவர், ஓணம் பண்டிகைக்கு அழகான வாழ்த்து கூறியுள்ளார்.

onam actress photos

இனியா: வாகை சூடவா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர் மத்தியில் நடிகையாக அறியப்பட்டவர் நடிகை இனியா. பல திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள இனியா, தற்போது வெப் தொடர் ஒன்றில் நடித்துள்ளார். இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி கேளா பாரம்பரிய உடையில் வந்து தனது ரசிகர்களுக்கு ஓணம் வாழ்த்து கூறியுள்ளார்.

onam actress photos

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X