வறுமையின் கொடுமை...பிரபல நடிகையின் உறவுப்பெண் சகோதரருடன் தற்கொலை...
சென்னை : வறுமைக்காரணமாக பிரபல நடிகையின் உறவுப்பெண் அவரது சகோதரர் இருவரும் தற்கொலை செய்துக்கொண்டனர். இரண்டுபேர் திடீரென தற்கொலை செய்துக்கொண்ட துயரமான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஊர்வசியின் அண்ணன் கமலுக்கு பிரமிளா என்பவருடன் திருமணம் நடந்தது. ஆனால், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்
இதையடுத்து, பிரமிளா தனது தம்பி சுசீந்திரனுடன் விழுப்புரத்தில் வசித்து வந்தார்.

கொரோனா
கொரோனா என்ற கொடிய வைரஸ் பல உயிர்களை காவு வாங்கியது என்றால், கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து, வறுமையில் சிக்கி சின்னாபின்னமாகி பலர் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்டார்கள். அது போன்ற துயரமான சம்பவம் தான் நடிகை ஊர்வசியின் குடும்பத்தில் நிகழ்ந்துள்ளது.

சாப்பாட்டுக்கே திண்டாட்டம்
ஊர்வசியின் அண்ணன் கமலை விட்டு பிரிந்த பிரமிளா(வயது 52) தனது தம்பியுடன் சினிமா துணை நடிகையிடம் உதவியாளராக பணியாற்றி வந்தனர். கொரோனாவால் இவர்களுக்கு போதிய வருமானம் இல்லாததால் சேர்த்து வைத்திருந்த பணத்தை வைத்து வாழ்க்கையை நடத்தி வந்தனர். ஒரு கட்டத்தில் சேமிப்பு பணமும் தீர்ந்து விட்டதால் ஒரு வேளை சாப்பாட்டுக்கே திண்டாடி உள்ளனர்.

தூக்கிட்டு தற்கொலை
இந்நிலையில், வறுமையால் சிக்கிதவித்த அக்கா, தம்பி இருவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டனர். ஒருவாரமாக வீட்டின் கதவு பூட்டியே இருந்துள்ளது. மேலும் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அருகிலிருந்தவர்கள் காவல்நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பேரில், கதவை உடைத்து பார்த்தபோது இருவரும் தூக்கில் தொங்கி அழுகிய நிலையில் இருந்துள்ளனர்.

யாரும் காரணம் இல்லை
அவர்களின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனை செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில் தாங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும், வறுமை காரணமாகவே தாங்கள் தற்கொலை முடிவை எடுத்ததாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விபரீத முடிவு
ஊர்வசியின் அக்கா நடிகை கல்பனா, பிரமிளாவுக்கு அவ்வப்போது பணம் கொடுத்து உதவி செய்து வந்துள்ளார். கல்பனாவின் இறப்பிற்குப் பின் பிரமிளாவை பார்த்துக் கொள்வதற்கு யாரும், இல்லாததால் வறுமையில் பிரமிளா அவரது தம்பியும் இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











