நிறைய பேர் மிஸ் யூஸ் பண்ணி இருக்காங்க.. அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணணும்னு அவசியம் இல்ல.. நடிகை ஓவியா!

சென்னை: நடிகை ஓவியா 2010 ஆம் ஆண்டு வெளியான களவாணி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கலகலப்பு, மெரினா போன்ற ஒரு சில படத்தில் நடித்து விட்டு சினிமாவை விட்டு காணாமல் போனார்.

இதைத் தொடர்ந்து, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி மூலம், பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் அவர் நேர்மையாக நடந்து கொண்டதால், ஓவியாவிற்கு என்றே தனி ஆர்மியை ரசிகர்கள் தொடங்கினார். நடிகை ஓவியாவிற்கு தற்போது தனி பேன்ஸ் இருக்கிறார்கள்.

Oviya Bigg boss interview

நடிகை ஓவியா: இந்நிலையில், நடிகை ஓவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மது உடல் நலத்திற்கு கேடு என்று கேப்ஷனோடு சரக்குடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ளார். இதற்கு இணையத்தில் பலவிதமான கருத்துக்கள் பரவி வரும் நிலையில், தற்போது சோஷியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக ஓவியா மாறி இருப்பதால், அவரின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

மிஸ் யூஸ்: அதில், நிறைய பேர் என்னை மிஸ் யூஸ் பண்ணி இருக்காங்க, யாருக்காவது உண்மையா இருக்கும் போதுதான் அது நடந்து இருக்கிறது. குறிப்பா பண விஷயத்தில் நான் நிறைய ஏமாந்து இருக்கிறேன். எனக்கு மட்டுமில்ல என்னைப்போன்று இன்னசன்டா இருப்பவர்கள் பலரின் வாழ்க்கையில் இது நடந்து இருக்கிறது. இதை ஒன்றுமே பண்ண முடியாது, இதுபோல என் வாழ்க்கையிலும் நடந்த இருக்கு.

அவசியம் இல்லை : சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கத்தான் செய்கிறது, இதற்காக நான் அனைவரையும் அப்படி சொல்லவில்லை. ஆனால், அட்ஜெஸ்ட்மென்ட் செய்து சினிமாவிற்கு வரவேண்டும் என்கிற அவசியம் இல்லை, சினிமா என்பது ஒரு வேலை அவ்வளவு தான், இந்த வேலை இல்லை என்றாலும் வேறு வேலை கிடைக்கும். இதற்காக பணிந்து போவது தவறு, யாராவது அப்படி கேட்டால் அவர் பற்றி துணிந்து வெளியில் சொல்ல வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு பயம் வரும்.

காதலில் நம்பிக்கை இல்லை : ஆனால், இந்த காலத்திலும் பலர் இப்படி நடந்து கொள்வதை பார்க்கும் போது ரொம்ப அசிங்கமாக இருக்கிறது. அப்போது 18 வயது பெண்களுக்கு எதுவுமே தெரியாது அந்த நேரத்தில் சிலர் மிஸ் யூஸ் செய்வார்கள். அதன் பிறகு நமக்கு வயசாக பல விஷயத்தை நாம் புரிந்து கொண்டு அதற்கு தகுந்தபடி நடந்து கொள்வோம். ஆனால், இப்போது இருக்கும் பெண்கள் தைரியமான பெண்களாக இருக்கிறார்கள். காதல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஓவியா, என் மனதில் நிற்கக்கூடிய அளவிற்கு யாரும் என்னிடம் காதலை வெளிப்படுத்தியது இல்லை என்பதால், என்னுடைய க்ரஷ் பற்றி ஊருக்கே தெரியும். ஆனால், இப்போது வாழ்க்கை பற்றிய புரிதல் இருப்பதால், எதன் மீதும் பெரிதாக ஈடுபாடு இல்லை என்று ஓவியா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X