Oviya - நீங்கள் தன் பாலின ஈர்ப்பாளரா?.. ஓபனாக பதில் சொன்ன ஓவியா

சென்னை: Oviya (ஓவியா) நீங்கள் தன் பாலின ஈர்ப்பாளரா என்ற கேள்விக்கு நடிகை ஓவியா ஓபனாக பதிலளித்திருக்கிறார்.

களவாணி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ஓவியா. சற்குணம் இயக்கி விமல் நடித்திருந்த அந்தப் படம் முழுக்க முழுக்க கிராமத்து சப்ஜெக்ட்டாக உருவாகியிருந்தது. அதில் மகேஸ்வரி என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார் ஓவியா. படத்தில் அவரது நடிப்பை பார்த்த ரசிகர்கள் முதல் படம் மாதிரியே தெரியவில்லை. அவ்வளவு அழகாக நடித்திருக்கிறார் என்று பாராட்டினர். இதனால் அந்தப் படத்திலேயே கவனம் பெற்ற நடிகையாக மாறினார்.

Actress Oviya has openly answered the question of whether you are LGBT

அடுத்தடுத்த படங்கள்: களவாணி வெற்றிக்கு பிறகு கண்டிப்பாக பெரிய ரவுண்டு வரலாம் என நினைத்துக்கொண்டிருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு நேர் எதிராக நடந்தது. சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு படத்தில் நடித்து அந்தப் படமும் ஹிட்டானாலும் ஓவியா நினைத்த மாதிரி வாய்ப்பு எதுவும் அமையவில்லை. இருந்தாலும் ஒன்றிரண்டு படங்களில் தொடர்ந்து நடித்துக்கொண்டுதான் இருந்தார்.

பிரபலம்: திரைத்துறையில் அவருக்கு கிடைக்காத பிரபலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் கிடைத்தது. அந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்ட ஓவியா தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை பேசியும், செய்தும் வந்தார். மேலும் தன்னிடம் வம்பிழுத்தவர்களையும் ஒரு கை பார்த்தார். இதன் காரணமாக ஓவியாவுக்கென்றே பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனை மக்கள் பார்க்க தொடங்கினர்.

ஓவியா ஆர்மி: ஒருகட்டத்துக்கு மேல் ஓவியாவுக்கென்று ஆர்மியையும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ஆரம்பித்தனர். அந்த சீசனில் கலந்துகொண்ட சக போட்டியாளரான ஆரவ்வுடன் ஓவியாவுக்கு காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. டைட்டிலை வெல்வார் என்று எதிர்பார்த்த ஓவியா நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேறினார். ஆரவ் அந்த சீசனின் டைட்டிலை தட்டி சென்றார்.

ஏமாற்றம்தான்: பிக்பாஸ் சீசன் ஒன்றில் பெரும் பிரபலம் அடைந்துவிட்டதால் வரிசையாக பட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார் ஓவியா. ஆனால் அவர் எதிர்பார்த்த மாதிரி வாய்ப்புகள் வரவில்லையென்றாலும் காஞ்சனா 3, 90 ML உள்ளிட்ட பட வாய்ப்புகள் வந்தன. இவற்றில் காஞ்சனா 3 படத்தின் மூலம் மட்டும் ஓரளவு கவனத்தை ஈர்த்தார் ஓவியா.

Actress Oviya has openly answered the question of whether you are LGBT

ஓவியா பேட்டி: இதற்கிடையே பிக்பாஸ் வீட்டுக்குள் ஆரவ்வுடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்ட ஓவியா வெளியே வந்த பிறகு அதுகுறித்து பேசுவதை குறைத்துக்கொண்டார். மேலும் ஓவியாவுக்கு எப்போது திருமணம் என்றும் கேள்வி எழுந்தது. ஆனால் அவரோ தனக்கு திருமணம் செய்துகொள்வதில் விருப்பமில்லை. நடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என கூறினார்.

இதனையடுத்து ஓவியா எதற்காக திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்கிறார். ஒருவேளை அவர் தன் பாலின ஈர்ப்பாளரோ என ரசிகர்களில் ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பினர். சமீபத்தில் பேட்டி அளித்த அவரிடம் நீங்கள் தன் பாலின ஈர்ப்பாளரா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அப்படி சொல்லும்போது எனக்கு ஒரு மாதிரி இருக்கும். ஆனால் நான் தன் பாலின ஈர்ப்பாளராம் இல்லை" என கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

More from Filmibeat

Read more about: oviya ஓவியா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X