காதலனுக்கு கல்யாணம் ஆன விரக்தி போல.. ஓவியா போட்ட டிவிட்ட பாத்தீங்களா!
சென்னை: நடிகை ஓவியா பதிவிட்டுள்ள டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள் குழப்பமடைந்துள்ளனர்.
களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஓவியா. பல படங்களில் நடித்துள்ள ஓவியா, விஜய் டிவியில் தொடங்கிய பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதில் பங்கேற்ற சக போட்டியாளரான ஆரவை காதலித்தார் ஓவியா. ஆனால் தனக்கு வெளியே காதலி இருப்பதாக கூறி ஓவியாவின் காதலை ஏற்க மறுத்தார் ஆரவ்.

தற்கொலை முயற்சி
இதனை தொடர்ந்து சக ஹவுஸ் மேட்டுகளால் கார்னர் செய்யப்பட்டார் ஓவியா. ஜூலி, காயத்ரி ரகுராம், ஷக்தி, நமீதா என பலரும் சேர்ந்து ஓவியாவை கார்னர் செய்ய தனிமையில் ஏங்கினார் ஓவியா. மன அழுத்தம் அதிகரிக்க அங்கிருந்த நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

ரசிகர்கள் ஹேப்பி
இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் ஓவியா. அதன்பிறகு ஆரவும் ஓவியாவும் வெளிநாடுகளில் தனியாக சுற்றுவது போன்ற போட்டோக்கள் சமூக வலைதளத்தில் வெளியானது. இதனை பார்த்த ரசிகர்கள் ஓவியாவின் காதலை ஆரவ் ஏற்றுக்கொண்டார் போல என சந்தோஷப்பட்டனர்.

கடந்த வாரம் திருமணம்
ஆனால் நாங்கள் வெறும் நண்பர்கள்தான் என்று கூறினர் இதனால் ஏமாந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் கடந்த வாரம் ஆரவ் தனது நீண்ட நாள் காதலியான ராஹியை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் பிக்பாஸில் பங்கேற்றவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

சம்பந்தமே இல்லாமல்
ஆனால் ஓவியா மட்டும் பங்கேற்றதாக தெரியவில்லை. ஆரவ் திருமணம் குறித்து ஏதாவது டிவிட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் சம்பந்தமே இல்லாமல் இரு டிவிட்டை பதிவு செய்துள்ளார் ஓவியா.

என்ன ஆச்சு?
அதாவது, இந்த உலகம் ஒரு ஆபத்தான இடமாகும், இது தீமை செய்பவர்களால் அல்ல, அது ஒன்றும் செய்யாதவர்களால் தான் என டிவிட்டியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், என்ன தலைவி என்ன ஆச்சு ரொம்ப குழப்பமா இருக்கீங்க போல என கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











