ஆரவ் திருமணத்தில் பங்கேற்காதது ஏன்? முதல் முறையாக மனம் திறந்த ஓவியா.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

சென்னை: ஆரவ் திருமணம் குறித்து நடிகை ஓவியா முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தவர் நடிகை ஓவியா. பல படங்களில் நடித்துள்ள ஓவியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இதில் பங்கேற்ற சக போட்டியாளரான ஆரவை காதலித்தார் ஓவியா. ஆனால் தனக்கு வெளியே காதலி இருப்பதாக கூறி ஓவியாவின் காதலை ஏற்க மறுத்தார் ஆரவ்.

நீச்சல் குளத்தில் குதித்து

நீச்சல் குளத்தில் குதித்து

தொடர்ந்து சக ஹவுஸ் மேட்டுகளால் கார்னர் செய்யப்பட்டார் ஓவியா. ஜூலி, காயத்ரி ரகுராம், ஷக்தி, நமீதா என பலரும் சேர்ந்து ஓவியாவை டார்கெட் செய்ய பிக்பாஸ் வீட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்டார் ஓவியா. இதன் காரணமாக மன அழுத்தம் அதிகரிக்க அங்கிருந்த நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

வெளிநாடு டூர்

வெளிநாடு டூர்

இதனை தொடர்ந்து விதிகளை மீறியதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் ஓவியா. அதன்பிறகு ஆரவும் ஓவியாவும் வெளிநாடுகளில் தனியாக சுற்றுவது போன்ற போட்டோக்கள் சமூக வலைதளத்தில் வெளியானது. இதனை பார்த்த ரசிகர்கள் ஓவியாவின் காதலை ஆரவ் ஏற்றுக்கொண்டார் போல என கூறி வந்தனர்.

ஆரவ் திருமணம்

ஆரவ் திருமணம்

ஆனால் அவர்களோ நாங்கள் வெறும் நண்பர்கள்தான் என்று கூறினர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ஆரவ் தனது நீண்ட நாள் காதலியான ராஹியை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் பிக்பாஸில் பங்கேற்றவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

ஓவியா மிஸ்ஸிங்

ஓவியா மிஸ்ஸிங்

ஆனால் ஓவியா மட்டும் மிஸ்ஸிங். ஆரவ் திருமணத்தில் நீங்கள் ஏன் பங்கேற்கவில்லை என ரசிகர்கள் கேட்டுவந்தனர். இந்நிலையில் அதுகுறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் ஓவியா.
அதாவது இன்ஸ்டாகிராமில் லைவில் தனது ரசிகர்களுடன் உரையாற்றினார் ஓவியா.

லாக்டவுன் என்பதால்

லாக்டவுன் என்பதால்

அப்போது ஆரவின் திருமணத்தில் தான் ஏன் பங்கேற்கவில்லை என்பது குறித்து தெளிவுபடுத்தினார். லாக்டவுன் நேரம் என்பதால் தான் கேரளாவில் இருந்தேன், என்றும், அதனால்தான் தன்னால் ஆரவ் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.

இனிமே பேசாதீங்க

இனிமே பேசாதீங்க

ஆனால் அவருக்கு ஒரு அழகான வாழ்க்கை கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, அவருக்கு நல்வாழ்த்துக்கள் என்றும் ஓவியா கூறினார். மேலும் தனக்கும் ஆரவ்வுக்கும் இடையில் இருந்த அனைத்தும் இப்போது முடிந்துவிட்டன என்றும், இனிமேல் அது குறித்து தன்னிடம் கேள்விகளைக் கேட்க வேண்டாம் என்றும் ஓவியா தனது ரசிகர்களைக் கேட்டுக்கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X