யோகி பாபுவுக்கு ஜோடியான ஓவியா.. தாறுமாறாக ரிட்டர்ன் ஆகத் துடிக்கும் தலைவி.. குவியும் வாழ்த்துக்கள்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் தலைவியான ஓவியாவின் அடுத்த படம் குறித்த ஹாட் அப்டேட் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் காமெடியில் நம்பர் ஒன்னாக கலக்கி வரும் நடிகர் யோகி பாபுவின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் நடிகை ஓவியா.

வரும் செப்டம்பர் 24ம் தேதி புதிய படத்தின் பூஜை போடப்படுவதாக நடிகை ஓவியாவே தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து தனது ஆர்மியினரை உற்சாகப்படுத்தி உள்ளார்.

ரசிகர்களின் தலைவி

ரசிகர்களின் தலைவி

பிக் பாஸ் தமிழ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை ஓவியாவுக்கு அந்த நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்கள் அவருக்கு தனியாக ஓவியா ஆர்மி என்ற ஒன்றை தொடங்கினர். ரசிகர்களின் தலைவியாக இணையத்தை கலக்கி வரும் நடிகை ஓவியாவின் அடுத்த படம் குறித்த அசத்தலான அப்டேட் வெளியாகி உள்ளது.

யோகி பாபு ஜோடியாக

யோகி பாபு ஜோடியாக

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா லாரன்ஸ் உடன் இணைந்து காஞ்சனா 3 படத்தில் நடித்து கலக்கி இருந்தார். மேலும், அவர் நடிப்பில் வெளியான சில படங்கள் அவருக்கு பெருமளவில் கை கொடுக்காத நிலையில், ஓவியாவின் அடுத்த படம் குறித்த எந்தவொரு அப்டேட்டும் வராமல் இருந்தது. இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக கலக்கி வரும் யோகி பாபுவுடன் புதிய படம் ஒன்றில் இணைந்து நடிக்க உள்ளார் ஓவியா.

மண்டேலா

மண்டேலா

ஒரு பக்கம் காமெடியனாகவும் மறு பக்கம் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார் நடிகர் யோகி பாபு. கடைசியாக யோகி பாபு நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படம் நடிகராக யோகி பாபுவை நன்றாகவே பட்டைத் தீட்டியது. மேலும், யோகி பாபு படத்தில் பல படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

வடிவேலுவுக்கு பதில்

வடிவேலுவுக்கு பதில்

இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் வடிவேலு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட பேய் மாமா படத்தில் அவருக்கு பதிலாக யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ளார். இந்த வாரம் அந்த படம் ரிலீசாக உள்ள நிலையில், சமீபத்தில் வெளியான படத்தின் போஸ்டர் பாலிவுட்டில் விக்கி கவுஷல் நடித்த பூட் போலீஸ் பட போஸ்டரின் காப்பி என்பது கண்டுபிடிக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Recommended Video

Yogi Babu Cricketer Natarajan சந்திப்பில் நடந்த செம்ம கலாட்டா | IPL
ரூட்டை மாற்றிய ஓவியா

ரூட்டை மாற்றிய ஓவியா

முன்னணி நடிகர்களுடன் மட்டுமே இணைந்து நடிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த ஓவியாவுக்கு அதிகளவில் பட வாய்ப்புகள் குவியாத காரணத்தால் தனது ரூட்டை உடனடியாக மாற்றிய நடிகை ஓவியா யோகி பாபுவுக்கு ஜோடியாகி உள்ளார்.

பட பூஜை எப்போ

பட பூஜை எப்போ

அன்கா மீடியா எனும் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக உருவாக உள்ள படத்தில் யோகி பாபு மற்றும் ஓவியா இணைந்து நடிக்கின்றனர். வரும் செப்டம்பர் 24ம் தேதி காலை 9 மணிக்கு சாலிகிராமத்தில் உள்ள பாலுமகேந்திரா ஸ்டூடியோவில் படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற உள்ளதாக அழைப்பிதழ் உடன் ட்வீட் போட்டுள்ளார் நடிகை ஓவியா.

குவியுது வாழ்த்து

குவியுது வாழ்த்து

வாவ்! இது ரொம்ப பெரிய விஷயம்.. இன்னும் ஓவியா பேபிக்கு நிறைய புதிய படங்கள் கிடைக்கும் என ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் தலைவி ஓவியாவை வாழ்த்தி வருகின்றனர். சமீபத்தில், விஜய் டிவியில் நடைபெற்ற பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் ஓவியாவை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X