Oviya: நேத்து நைட் சிறப்பா போச்சாம்.. ஓவியாவே ரிலீஸ் செய்த புது வீடியோ.. அம்மனி எப்பவுமே தனி ரகம்!

சென்னை: நடிகை ஓவியா, சினிமாவில் பெற்ற புகழை விடவும், விஜய் டீவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1இன் மூலம் நன்றாகவே உலகிற்கு அறிமுகமானார். பெரும்பாலான மக்கள் கரங்களில் இணையம் வளரும் காலத்தில் இணையத்திலும் பிரபலமாக மாறியதால், ஓவியாவுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம், அதாவது ஓவியா ஆர்மி இப்போதும் உள்ளது. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவும் அதற்கு அவர் இட்டுள்ள கேப்ஷனும் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

நடிகை ஓவியா தமிழ் சினிமாவில் களவாணி படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். இந்தப் படத்தில் ரசிகர்களின் மனம் கவரும் நடிப்பினை வெளிப்படுத்தி தனது முதல் படத்திலேயே நல்ல வரவேற்பினை தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெற்றார்.ஓவியாவின் இயற்பெயர் ஹெலன் நெல்சன். சினிமாவிற்காக ஓவியா என மாற்றி வைத்துக் கொண்டார். தனது கதாபாத்திரத்திற்கென ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனிப்பும் வரவேற்பும் இருக்கும் படங்களைத் தேர்வு செய்து நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். களாவாணி, மெரினா, முடர் கூடம், மதயானைக் கூட்டம், கலகலப்பு என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழில் அறிமுகமாவதற்கு முன்னர் மலையளத்திலேயே இரண்டு படங்களில் நடித்துள்ளார் ஓவியா.

oviya

தமிழ், மலையாளம் மட்டும் இல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப்படங்களிலும் நடித்து வருகின்றார். இவருக்கு தென்னிந்தியாவில் ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றார்கள் என்று ஒத்துக்கொள்ள வேண்டும்.பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் மிகவும் கவனிக்கத்தகுந்த பிரபலமாக மாறிய ஓவியாவின் தக் லைஃப் ரிப்ளைகளுக்கெனவும் அவரது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பார்க்கவும் பின் தொடரும் ரசிகர்கள் அதிகம். அந்த வகையில்இன்ஸ்டாகிரமில் மட்டும் கிட்டத்தட்ட 7 லட்சம்பேர் பின் தொடருகின்றனர். ஒரு கட்டம் வரை ஹோம்லி கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஓவியா, அதன் பின்னர் கவர்ச்சியில் களமிறங்கியும் கலக்கி வருகின்றார்.

ஆதரவு: சமீபத்தில் ஓவியாவின் அந்தரங்க வீடியோ என்ற பெயரில் 17 நொடிகள் கால அளவு கொண்ட ஒரு வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. இது ஓவியா ரசிகர்களை கொஞ்சம் அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும், வீடியோ வெளியானது தொடர்பாக, இணையத்தில் பலரும் ஓவியாவுக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்தனர்.

oviya

அந்தரங்க வீடியோ: அதாவது, நடிகை ஓவியா, சிறிய குழந்தை கிடையாது. அவர் தனக்கு விருப்பமானவருடன் தனிமையில் இருப்பது என்பது அவருடைய சொந்த முடிவு. அப்படி இருக்கும்போது, அவரது தனிப்பட்ட வாழ்க்கையில், தலையிட யாருக்குமே உரிமை இல்லை. மேலும், அவரது அந்தரங்க வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளது என்பதே, அநாகரீமான செயல். மேலும் அவர் தனிப்பட்ட முறையில் இருப்பதை வீடியோவாக பதிவு செய்யவேண்டும் என முடிவு செய்வது என்பதே சட்டவிரோதமான செயல். எனவே வீடியோவைப் பரப்பும் நபர்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்தனர்.

oviya

வீடியோ: இப்படியான நிலையில் நடிகை ஓவியா நேற்று அதாவது டிசம்பர் 7ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். பெட்டில் படுத்துக் கொண்டும் உருண்டு கொண்டும் அவரே எடுத்துள்ள அந்த வீடியோவினை ஓவியா பகிர்ந்துள்ளார். மேலும் அந்த வீடியோவிற்கு ஓவியா, 'நேற்று இரவு ஒரு நல்ல இரவாக அமைந்தது. நன்றாக தூங்கினேன்' என கேப்ஷன் இட்டுள்ளார். இதுமட்டும் இல்லாமல், ஓவியாவின் ட்விட்டர் கணக்கினை, ட்விட்டர் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அக்கவுண்ட் என அங்கீகரித்து ப்ளூ டிக் வழங்கியுள்ளது. இதனையும் ஓவியா மகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X