Oviya - பாலியல் கல்வி இருந்து என்ன யூஸ்.. பிராக்டிக்கலாக செய்ய வேண்டும்.. ஓவியா ஓபன் டாக்

சென்னை: Oviya (ஓவியா) பாலியல் கல்வி இருந்து என்ன யூஸ் அதை பிராக்டிக்கலாக செய்ய வேண்டும் என நடிகை ஓவியா தெரிவித்திருக்கிறார்.

களவாணி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஓவியா; அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கிடைத்த படங்களும் சரியாக ஹிட்டாகவில்லை. சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு படம் மட்டும் நன்றாக ஓடியது. ஆனால் அந்தப் படத்தில் ஓவியா பெரிதாக கவனத்தை ஈர்க்கவில்லை.

Actress Oviya Talks about Sex Education and Prostitution

பிக்பாஸ் ஓவியா ஆர்மி: பட வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டார். அதில் ஓவியாவின் செயல்பாடுகளை பார்த்த ரசிகர்கள் ஓவியாவுக்கென்று தனி ஆர்மியை ஆரம்பித்தார்கள். தனது மனதில் பட்டதை பேசும், செய்யும் அவரை வைத்து மீம்ஸ்களையும் சமூக வலைதளங்களில் பரப்பினர். ரொம்பவே ஃபேமஸ் ஆனதால் ஓவியாதான் முதல் சீசனில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆரவ் டைட்டிலை தட்டி சென்றார்.

காதல்: இதற்கிடையே பிக்பாஸ் முதல் சீசனில் ஓவியா தனது சக போட்டியாளர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருந்தார். எனவே இரண்டு பேரும் காதலிப்பதாக பலரும் கூறினர். ஆனால் இரண்டு பேருமே அதுகுறித்து எதுவும் பேசாமல் இருந்தனர். பிக்பாஸ் முடிந்த பிறகு இரண்டு பேரும் திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். அந்தவகையில் ஓவியா காஞ்சனா 3, 90 எம்.எல் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இரண்டு படங்களுமே சுமாரான வரவேற்பையே பெற்றது.

Actress Oviya Talks about Sex Education and Prostitution

திருமணம் இல்லை: ஓவியாவுக்கு பட வாய்ப்புகள் பிக்பாஸுக்கு பிறகும் இல்லாததால் திருமணம் செய்துகொள்வார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. அதற்கு காரணம் ஆரவ்தான் என கூறப்பட்டது. ஆனால் அதனை அவர் மறுத்தார். மேலும் ஓவியா ஒரு தன் பாலின ஈர்ப்பாளர் அதனால்தான் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும் கூறினர். அதனையும் சமீபத்திய பேட்டியில் திட்டவட்டமாக மறுத்தார்.

பாலியல் கல்வியால் என்ன யூஸ்: இந்நிலயில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார் ஓவியா. அப்போது பேசிய அவர், "பாலியல் கல்வி இருந்து என்ன பிரோயஜனம். அதை பிராக்டிக்கலாக செய்து பார்க்க வேண்டும்தானே. எல்லோரும் ஒரு முகமூடி போட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். எல்லோருக்குமே ஆசை இருக்கிறது. ஹார்மோன்கள் இருக்கின்றன. கலாசாரத்துக்கு பின்னால் பலர் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள். அதுதான் உண்மை. விபசாரத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும். அப்படி செய்தால் பாலியல் பலாத்காரம் எல்லாம் கம்மியாகிவிடும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X