கொஞ்சம் கூட நியாயமே இல்லை.. ரசிகையின் திடீர் மரணத்தால் உடைந்து போன நடிகை ஓவியா!

சென்னை: தனது ரசிகையின் திடீர் மரணத்தால் நடிகை ஓவியா உடைந்து போயுள்ளார்.

Recommended Video

ஓவியா ஆர்மியின் அட்மின் காலமான செய்தியை கேட்டு சோகத்தில் மூழ்கிய ஓவியா

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமனாவர் நடிகை ஓவியா. இவர் கமலின் மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு சில்லுன்னு ஒரு சந்திப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமானார். பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றார் ஓவியா.

ஓவியா ஆர்மி

ஓவியா ஆர்மி

இதில் பொய் புரட்டு என எதுவும் இல்லாமல் ரொம்பவே நேர்மையாக நடந்து கொண்டார் நடிகை ஓவியா. இதனால் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார். சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்களை கொண்ட ஓவியாவுக்கு என தனி ஆர்மியே தொடங்கினர் ரசிகர்கள்.

ரசிகை திடீர் மரணம்

ரசிகை திடீர் மரணம்

எத்தனை சீசன்கள் வந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா போன்ற போட்டியாளர் இல்லவே இல்லை என இன்றும் அவரது பெருமையை பேசி வருகின்றனர். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார் ஓவியா. இந்நிலையில் ஓவியாவின் தீவிர ரசிகை ஒருவர் திடீரென மரணமடைந்துள்ள சம்பவம் அவரை உலுக்கி போட்டுள்ளது.

ஆசை நிறைவேறாமலேயே..

ஆசை நிறைவேறாமலேயே..

அதாவது ஓவியாவின் தீவிர ரசிகைகளில் ஒருவரான சான்வி என்பவர் அண்மையில் திடீரென மரணம் அடைந்தார். அவர் மரணமடைவதற்கு முன் ஒரு முறையாவது ஓவியாவை பார்க்கவேண்டும் என்று ஆசையுடன் இருந்துள்ளார். ஆனால் அந்த ஆசை நிறைவேறாமலே அவர் இறந்துவிட்டார்

பெற்றோரை சந்திக்க

பெற்றோரை சந்திக்க

இதுகுறித்த தகவலை ஓவியாவின் ரசிகர்கள் அவருக்கு தெரியப்படுத்தினர். இதனையறிந்த ஓவியா உடனடியாக தன்னுடைய தீவிர ரசிகையின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் சான்வியின் பெற்றோரை தான் சந்திக்க விரும்புவதாகவும், அவர்களை தொடர்புகொள்ள தனக்கு யாராவது உதவுங்கள் என்றும் கேட்டுள்ளார்.

 கொஞ்சம் கூட நியாயமில்லை

கொஞ்சம் கூட நியாயமில்லை

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,
இது கொஞ்சம் கூட நியாயமற்றது !! இந்த எதிர்பாராத இழப்பைக் கேட்டு நான் மிகவும் வருந்துகிறேன்.. தயவுசெய்து சான்வியின் பெற்றோரை எவ்வாறு தொடர்பு கொள்வது என்று எனக்குத் தெரியப்படுத்துங்கள். அவர் எங்கிருந்தாலும் அமைதியையும் ஓய்வையும் காண பிரார்த்தனை செய்கிறேன் என கூறியுள்ளார்.

ரசிகர்கள் உதவி

ரசிகர்கள் உதவி

ரசிகையின் மரணத்திற்கு உடனடியாக ரியாக்ட் செய்ததோடு அவரது பெற்றோரையும் சந்திக்க முடிவு செய்த ஓவியாவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். பலரும் மரணமடைந்த ரசிகை மற்றும் அவரது பெற்றோரை தொடர்பு கொள்வதற்கான உதவிகளை செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X