தொழிலதிபருடன் திடீர் காதல்.. விஸ்வாசம், சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்.. திரையுலகம் வாழ்த்து!
சென்னை: விஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை, தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.
பிரபல நடிகை பாப்ரி கோஷ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர், பெங்காலி படங்களில் நடித்து வந்தார்.
விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 2015ல் வெளியான டூரிங் டாக்கீஸ் படம் மூலம் தமிழுக்கு வந்தார்.

சின்ன வேடங்கள்
இதையடுத்து, அவருக்கு பெரிய வாய்ப்புகள் வரவில்லை. மற்ற மொழிகளிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், சின்ன சின்ன வேடங்களில் நடிக்க முடிவு செய்தார். தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் பைரவா, சர்கார் படங்களில் நடித்தார். சந்தானத்துடன் சக்க போடு போடு ராஜா படத்திலும் நடித்திருந்தார்.

நயன்தாரா தோழி
அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்திருந்தார். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும் சின்னத்திரை தொடர்களிலும் கவனம் செலுத்தினர். சன் டிவியில் வெளியான, நாயகி, பாண்டவர் இல்லம், பூவே உனக்காக, சித்தி 2, மகராசி ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார்.

நடந்து முடிந்துள்ளது
தொடர்ந்து டிவி தொடர்களில் நடித்து வருகிறார். இவரும் தொழிலதிபர் ஒருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து இவர்கள் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இதில் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
Recommended Video

திரை பிரபலங்கள்
கொரோனா தொற்று காரணமாக, எளிமையாக நடந்ததாகக் கூறப்படுகிறது. பெங்காலி முறைப்படி இந்த திருமணம் நடந்துள்ளது. இதில், நடிகை அம்பிகா, டிவி நடிகர் நரேஸ்வர் உட்பட சின்னத்திரை மற்றும் திரை பிரபலங்கள் சிலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











