காது கேட்கவில்லை.. வாய் பேச முடியவில்லை.. மரணப்படுக்கையில் உயிருக்கு போராடும் 'பரவை' முனியம்மா!

நடிகை பரவை முனியம்மாவின் உடல்நிலை கடலைக்கிடமாக உள்ளது.

மதுரை: பல படங்களில் நடித்து புகழ்பெற்ற பிரபல பாடகி மற்றும் நடிகை பரவை முனியம்மாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தூள், காதல் சடுகுடு, சண்டை, வீரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் மதுரை பரவை பகுதியை சேர்ந்த முனியம்மா. 85 வயதாகும் இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.

விக்ரம் நடித்த தூள் படத்தில் 'சிங்கம்போல நடந்து வரான் செல்ல பேராண்டி..'' என்ற பாடல் மூலம் பிரபலமானவர் பரவை முனியம்மா. அதன் பிறகு அவர் ஒரு சில படங்களில் நடித்தார். பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன.

வைப்பு நிதி

வைப்பு நிதி

கடந்த சில ஆண்டுகளாக அவர் வறுமையில் வாடி வந்தார். அவருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.6 லட்சம் வங்கியில் வைப்பு நிதி செலுத்தப்பட்டு மாதம் ரூ.6 ஆயிரம் வருமானம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பரவை முனியம்மாவின் கோரிக்கை

பரவை முனியம்மாவின் கோரிக்கை

வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் பரவை முனியம்மா. தான் இறந்த பிறகு தனக்கு வழங்கப்பட்டு வந்த வைப்பு நிதியை தனது மாற்றுத்திறனாளி மகனுக்கு வழங்க அரசு முன்வர வேண்டும் என அவர் கோரிக்கை வைத்திருந்தார்.

உடல் நிலை மோசம்

உடல் நிலை மோசம்

இந்நிலையில் மருத்து செலவுக்கு போதுமான பணம் இல்லாததால் வீட்டிலேயே படுத்த படுக்கையாக உயிருக்கு போராடி வருகிறார் பரவை முனியம்மா. அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளது. வாய் பேச முடியாமல், காதும் கேட்காத நிலையில் உள்ளார். அவரது மகள்கள் வள்ளி மற்றும் ராக்கு ஆகியோர் உடன் இருந்து கவனித்து வருகிறார்கள்.

திட உணவு இல்லை

திட உணவு இல்லை

பரவை முனியம்மா தற்போது மரணப்படுக்கையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். எந்நேரத்திலும் அவரது உயிர் பிரியலாம் என மருத்துவர்கள் கூறிவிட்டதாக, பரவை முனியம்மாவின் மகள் தெரிவித்துள்ளனர்.

ஒரே ஆறுதல் கணவர் தான்

ஒரே ஆறுதல் கணவர் தான்

"பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் இருந்த போது, அம்மாவுக்கு ஒரே ஆறுதல் அப்பா வெள்ளச்சாமி தான். கடந்த 2014 ஆண்டு அப்பா இறந்த பிறகு அம்மாவின் உடல்நிலை மோசமாக ஆரம்பித்துவிட்டது. பட வாய்ப்புகளும் இல்லை. சினிமாவில் நடித்த போது அவருக்கு கிடைத்த பணத்தின் பெரும்பகுதியை மேனேஜர் தான் எடுத்துக்கொண்டார்", என பரவை முனியம்மாவின் மகள்கள் கூறினர்.

உயிருக்கு போராடுகிறார்

உயிருக்கு போராடுகிறார்

பரவை முனியம்மா தற்போது மரணப்படுக்கையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். எந்நேரத்தில் அவரது உயிர் பிரியலாம் என மருத்துவர்கள் கூறிவிட்டதாக, பரவை முனியம்மாவின் மகள் தெரிவித்துள்ளனர்.

மகனை பற்றி தான் கவலை

மகனை பற்றி தான் கவலை

உடல்நிலை மோசமான நிலையிலும் பரவை முனியம்மாவின் கவலை எல்லாம் அவரது மாற்றுத்திறனாளி மகன் செல்வக்குமாரை பற்றி தான். தனக்கு பிறகு மகனின் நிலை என்னாகுமோ என்ற கவலையில் இருக்கிறார். பரவை முனியம்மா - வெள்ளச்சாமி தம்பதிக்கு மொத்தம் 3 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். இதில் செல்வக்குமாரை தவிர மற்ற ஐவருக்கும் திருமணமாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X