அந்த பொண்ண புடிச்சி விசாரிங்க.. ஸொமேட்டோ ஊழியர் மீது தப்பு இல்லைன்னு தோணுது.. பிரபல நடிகை ஆவேசம்!

மும்பை: பெங்களூருவில் ஸொமேட்டோ ஊழியரால் தாக்கப்பட்டதாக மூக்கில் ரத்தம் சொட்ட சொட்ட பெண் ஒருவர் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Recommended Video

Zomato Delivery Boy-யால் பெண் தாக்கப்பட்டரா? | Zomato Delivery Boy VS Hitesha Chandranee

உணவு டெலிவரி செய்ய வந்த ஸொமேட்டோ ஊழியர் தன் மீது எந்த குற்றமும் இல்லை என உருகிய நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அவர் மீது பிரபல பாலிவுட் நடிகையான பரிணீத்தி சோப்ரா ஆதரவு காட்டி உள்ளார்.

மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டான ஹிதேஷா சந்திரனி மீது தான் தவறு இருப்பதாக தான் நம்புவதாக தெரிவித்துள்ள நடிகை பிரியங்கா சோப்ராவின் சகோதரி அந்த பெண்ணிடம் விசாரணை நடத்த வலியுறுத்தி உள்ளார்.

மூக்கில் ரத்தம் வழிய

மூக்கில் ரத்தம் வழிய

பெங்களூருவை சேர்ந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட் மற்றும் சோசியல் இன்ஃப்ளூயன்ஸரான ஹிதேஷா சந்திரனி உணவு டெலிவரி செய்ய வந்த ஸொமேட்டோ ஊழியர் தன்னை மூக்கில் குத்தி தாக்கினார் என்றும், அதனால் மூக்குடைந்து ரத்தம் வழிகிறது என்றும் கடந்த மார்ச் 9ம் தேதி வெளியிட்ட வீடியோ பரபரப்பை கிளப்பியது.

காமராஜ் கைது

காமராஜ் கைது

அந்த பெண் வெளியிட்ட அந்த வீடியோவை பார்த்த உடனே தொடர்பு கொண்ட ஸொமேட்டோ அதிகாரிகள், பெண்ணுக்கு ஆதரவாக பேசி ஸொமேட்டோ ஊழியரை சஸ்பெண்ட் செய்தனர். கர்நாடக காவல் துறையில் ஹிதேஷா அளித்த புகாரின் பேரில் காமராஜ் என்கிற அந்த டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டார்.

நான் குத்தவில்லை

நான் குத்தவில்லை

போலீசாரால் கைது செய்யப்பட்ட டெலிவரி ஊழியர் காமராஜ், தான் அந்த பெண்ணை தாக்கவில்லை என்றும், உணவு வர தாமதம் ஆனதால், பணம் தர மாட்டேன் என அவர் தான் சண்டை போட்டார் என்றும், அடிமை என திட்டினார் என்றும், செருப்பை கொண்டு எறிந்தார் என்றும் விசாரணையில் கூறியுள்ளார். மேலும், அவரது மூக்கில் தான் குத்தவில்லை என்றும், ஹிதேஷா அணிந்திருந்த மோதிரத்தால் ஏற்பட்ட காயம் தான் அது என்றும் கூறியுள்ளார்.

மாறிய ஆதரவு

மாறிய ஆதரவு

ஹிதேஷா சந்திரனி போட்ட வீடியோவை பார்த்து நாடே ஸொமேட்டோ டெலிவரி ஊழியரை திட்டித் தீர்த்த நிலையில், தற்போது டெலிவரி ஊழியர் பக்க கதையை கேட்டதும், இப்படியும் நடந்திருக்க வாய்ப்புகள் இருப்பதாக கருதி பலரும் வேலையிழந்து, கைதாகி நிற்கும் காமராஜுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

பிரியங்கா சோப்ரா தங்கை

பிரியங்கா சோப்ரா தங்கை

பிரபல பாலிவுட் நடிகையும் பிரியங்கா சோப்ராவின் தங்கையுமான பரிணீத்தி சோப்ரா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், ஸொமேட்டோ டெலிவரி ஊழியர் குற்றமற்றவராகத் தான் இருப்பார் என்றும், சில பெண்கள் இப்படி பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதால் யார் உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவில்லை என பதிவிட்டுள்ளார்.

அந்த பெண்ணிடம் விசாரிங்க

அந்த பெண்ணிடம் விசாரிங்க

மேலும், இந்த விவகாரத்தில் உண்மை என்னவென்ன என்பதை கண்டறிய வேண்டும். எனக்கென்னவோ டெலிவரி ஊழியர் மீது தப்பு இல்லை என்றே தெரிகிறது. அந்த பெண்ணை பிடித்து விசாரிக்க வேண்டும். ஸொமேட்டோ நிறுவனம் தனது ஊழியர்களை இதுபோன்ற நேரத்தில் கை விடக் கூடாது, உங்களுக்கு என்னால் என்ன உதவி செய்ய முடியுமோ நான் செய்ய தயாராக இருக்கிறேன் என பரிணீத்தி சோப்ரா ஆவேசப்பட்டுள்ளார்.

பாராட்டும் ரசிகர்கள்

பாராட்டும் ரசிகர்கள்

சாய்னா நேவால் பயோபிக்கில் நடித்துள்ள நடிகை பரிணீத்தி சோப்ரா இப்படியொரு போஸ்ட் போட்டு சாமானிய மனிதருக்கு சப்போர்ட் செய்திருப்பதை பார்த்த நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர். மேலும், ஸொமேட்டோ நிறுவனம் அவருக்கு அந்த வேலையை திரும்பி தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

விசாரணை நடக்குமா

விசாரணை நடக்குமா

நாடு முழுவதும் ஸொமேட்டோ ஊழியர் காமராஜுக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், ஹிதேஷாவிடம் கர்நாடக காவல்துறையினர் உரிய விசாரணைய நடத்துவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில் பாதிக்கப்பட்டது யாராக இருந்தாலும் அவர்கள் சட்டப்படி தண்டிக்கப் பட வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X