பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவரின் பதிவுக்கு லைக் போட்டு மாட்டிக் கொண்ட நடிகை.. மன்னிப்பு கேட்டார்!
சென்னை: பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரின் பதிவை லைக் செய்த பிரபல நடிகை மன்னிப்பு கேட்டுள்ளார்.
கேரளாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை பார்வதி மேனன். அவுட் ஆஃப் சிலபஸ் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து நோட்புக், வினோதயாத்ரா உள்ளிட்ட படங்களில் நடித்தார். மலையாளத்தை தொடர்ந்து கன்னடம் மற்றும் தமிழ் சினிமாவிலும் தடம் பதித்தார் பார்வதி.

தமிழில் பல படங்கள்
தமிழில் பூ படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தம வில்லன், பெங்களூரு நாட்கள், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

படுக்கையை பகிர
தொடர்ந்து மலையாள சினிமாவில் பிஸியாக உள்ள நடிகை பார்வதி, காஸ்ட்டிங் கோச் மற்றும் மீடூ குறித்து பேசினார். சினிமாவில் வாய்ப்பு பெற படுக்கையை பகிர வேண்டியுள்ளதாக அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பாலியல் துன்புறுத்தல்
இதனால் பட வாய்ப்புகளை இழந்தார் பார்வதி. தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார் நடிகை பார்வதி. இந்நிலையில் சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார் பார்வதி.

முகநூல் பக்கத்தில் பதிவு
அதாவது, கேரள பாப் பாடகரான வேடன் மீது சில பெண்கள் பாலியல் புகார் தெரிவித்தனர். முதலில் இதனை மறுத்தார் வேடன். பின்னர் தவறை ஒப்புக்கொண்ட அவர் பாதிக்கப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்டு முகநூல் பக்கத்தில் பதிவு வெளியிட்டார்.

லைக் செய்த பார்வதி
இருந்த போதும் அவருக்கு கண்டனங்கள் குவிந்தன. ஆனால் வேடனின் இந்தப் பதிவை நடிகை பார்வதி லைக் செய்தார். இதனை பார்த்த ரசிகர்கள் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவரின் பதிவை லைக் செய்வதா என பார்வதியை சமூக வலைதளங்களில் விளாசி தள்ளினர்.

டிஸ்லைக் செய்த பார்வதி
இதனை தொடர்ந்து அந்த பதிவை டிஸ்லைக் செய்தார் பார்வதி. மேலும் வேடன் மீது தைரியமாக குற்றம்சாட்டிய பெண்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பல ஆண்கள் தங்களின் தவறை ஒப்புக்கொள்ள மாட்டார்கள், வேடனின் மன்னிப்பு பதிவை நான் லைக் செய்தேன்.

லைக்கை நீக்கிவிட்டேன்
அவரது பதிவு கொண்டாடும் பதிவு இல்லை என்பதை நான் அறிவேன். வேடன் கேட்ட மன்னிப்பு பதிவு சரியானது அல்ல என்று பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்த்ததும் எனது 'லைக்'கை நீக்கி தவறை திருத்தி விட்டேன்.

மன்னிப்பு கேட்ட பார்வதி
நான் எப்போதும் பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கமே நிற்பேன். எனது செயலால் பாதிக்கப்பட்டோர் புண்பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். நடிகை பார்வதியின் இந்த பதிவை பலர் லைக் செய்திருந்த போதும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











