twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பூரம் திருவிழாவிற்கு நோ சொல்லுங்க...கேரள மக்களிடம் நடிகை பார்வதி வலியுறுத்தல்

    |

    திருச்சூர் : புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவை, வழக்கம் போல் இந்த ஆண்டும் நடத்த கேரள அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா வேகமாக பரவி வரும் இந்த சமயத்தில் பூரம் திருவிழாவை நடத்துவதற்கு சமூக ஆர்வலர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்தியன் 2 படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய விவேக் தீயாய் பரவும் வீடியோ! இந்தியன் 2 படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய விவேக் தீயாய் பரவும் வீடியோ!

    இந்நிலையில் நடிகை பார்வதியும், ஆன்லைனில் மக்களை ஒன்று திரட்டி பூரம் திருவிழாவை நடத்துவதற்கு எதிராக போராடி வருகிறார். பூரம் திருவிழா வேண்டாம் என கூறுங்கள் என கேரள மக்களை அவர் தனது சமூக வலைதளங்கள் வழியாக கேட்டு வருகிறார்.

    தலைமை செயலாளருக்கு கடிதம்

    தலைமை செயலாளருக்கு கடிதம்

    பூரம் திருவிழாவை நிறுத்தக்கோரி தலைமை செயலாளருக்கு எழுதிய கடிதத்தை பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அத்துடன் குறைந்தபட்ச மனிதநேயத்தை கடைபிடியுங்கள் என கேட்டுள்ளார். கொரோனா இரண்டாம் அலை பரவுவதால் குறைந்தபட்சம் 2 மாதங்களுக்காவது கூட்டம் கூடுவதை தவிர்த்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

    கொரோனா காலத்தில் இது தேவையா

    கொரோனா காலத்தில் இது தேவையா

    ஆனால் பூரம் திருவிழா, ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடும் திருவிழா. கடந்த சில ஆண்டுகளாகவே கேரள மாநிலம் வெள்ளம், கொரோனா ஆகியவற்றை எதிர்த்து போராடி வருகிறது. இந்த சூழலில் பூரம் திருவிழாவை நடத்தினால் அது கேரளாவிற்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். கடந்த ஆண்டு பொது மக்களுக்கு அனுமதியில்லாமல் பூரம் திருவிழா நடத்தப்பட்டதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடிந்தது எனவும் தலைமை செயலாளருக்கு எழுதி உள்ள கடிதத்தில் அந்த பத்திரிக்கையாளர் குறிப்பிட்டுள்ளார்.

    பூரம் யாருடைய திருவிழா

    பூரம் யாருடைய திருவிழா

    மேலும் அந்த பத்திரிக்கையாளர் தனது பதிவில், பூரம் யாருடைய திருவிழா? அது ஆண்களின் திருவிழா. பல்வேறு சமூகங்களை சேர்ந்த ஆண்கள் இதில் பங்கேற்கின்றன. பூரம் திருவிழா களத்தில் வைரசை பெறும் ஆண்கள், பிறகு வீட்டிற்கு செல்வதால் வீட்டில் உள்ள பெண்கள், குழந்தைகளுக்கும் பரவும் என குறிப்பிட்டுள்ளார்.

    Recommended Video

    ACTRESS பயங்கரமா திட்டு வாங்குவாங்க | Anchor Parvathy Talk | Filmibeat Tamil
    பூரத்திற்கு நோ சொல்லுங்க

    பூரத்திற்கு நோ சொல்லுங்க

    அவரின் இந்த பதிவிற்கு பார்வதி கருத்து பதிவிட்டுள்ளார். அத்துடன் பூரம் திருவிழாவை நடத்துவதற்கு எதிராக ஆன்லைன் போராட்ட இயக்கம் ஒன்றை துவக்கவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா பரவும் சமயத்தில் மக்கள் நலனுக்காக போராடும் அந்த பத்திரிக்கையாளரையும் பார்வதி பாராட்டி உள்ளார்.

    English summary
    Parvathy Thiruvothu took to her social media handle to protest over the decision to conduct Thrissur Pooram amid COVID-19.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X