இது அல்டிமேட்.. ஸ்டன்னிங் லுக்கில் பார்வதி நாயர்… அதிரும் இணையதளம்!
சென்னை : நடிகை பார்வதி நாயர் பளபளக்கும் பட்டுமேனி தெரியும் படி விதவிதமான புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகின்றனர்.
இவ்வாறு பல்வேறு மொழிகளிலும் நடித்து பிரபலமாக உள்ள பார்வதி நாயர் சமூக வலைதளங்களில் பல கோடி ரசிகர்களை கொண்டுள்ளார்.

மிஸ் கர்நாடகா
மாடல் அழகியாக தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் பார்வதி நாயர். "மிஸ் கர்நாடகா" மிஸ் நேவி குயின்" உள்ளிட்ட பட்டங்களை வென்று மாடலிங் துறையில் தனது கொடியை பறக்க விட்டவர்.

மலையாளத்தில்
மலையாள திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கி பார்வதி நாயர். அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல் முறையாக அறிமுகப் படுத்தப்பட்ட பார்வதி நாயர் அதில் வில்லன் கதாபாத்திரத்தில் அசத்தி இருந்த அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

முக்கிய ரோலில்
கிரிக்கெட் வீரர் கபில் தேவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பார்வதி நாயர் நடித்துள்ளார். இத்திரைப்படம் இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 2டி, 3டி ஆகிய பார்மெட்களில் டிசம்பர் 24-ஆம் தேதி வெளியாகிறது.

ஆலம்பனா
அறிமுக இயக்குனர் பாரி கே விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ஆலம்பனா என்ற படத்தில் நடித்துள்ளார். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் வைபவ் , முனீஷ், முரளி ஷர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

பளபளக்கும் மேனி
அனைவரும் மெச்சும் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களின் பேராதரவை பெற்று வரும் பார்வதி நாயர், தனது பளபளக்கும் பட்டு மேனியை தெறியவிட்டு விதவிதமான போஸில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு பலர் தங்கள் இதயத்தை பரிசளித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











