தவறற்ற நேர்மை தேவை.. பார்வதி நாயரின் இன்ஸ்டா கருத்து !
சென்னை : பார்வதி நாயர் புதிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகை பார்வதி நாயர் தென்னிந்திய சினிமாவில் நடிப்பை தொடர்ந்து கொடுத்து வரும் நடிகை. கடைசியாக தமிழில் வெள்ள ராஜா என்ற இணைய தொடரில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார் பார்வதி .

மலையாள சினிமா மூலம் தனது திரைக்கனவை துவங்கிய பார்வதி தமிழ் , மளையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் மலையாளத்தில் பாப்பின்ஸ் என்ற படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் .
தமிழில் என்னை அறிந்தால் படம் மூலம் அறிமுகமாகி, தனது முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தில் இடம் பிடித்து விட்டார் பார்வதி நாயர். அதன் பின் கோடிட்ட இடங்களை நிரப்புக, உத்தமவில்லன், எங்கிட்ட மோதாதே மற்றும் சீதக்காதி ஆகிய படங்களில் நடித்து ஓரளவு பெயர் சொல்லும் நடிகையாக மாறினார். இவர் ஆரம்பகாலத்தில் சினிமாவிற்கு மாடலிங்க் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்தார். இதனால் ஆரம்பத்தில் இருந்தே பார்வதிக்கு மாடலிங்கில் மீது அதிக ஆர்வம் .

தற்போது பார்வதி கருப்பு நிற ஆடையில் மிக அழகான போட்டோக்களை எடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறார். இந்த புகைப்படத்துடன் தவரற்ற நேர்மை தேவை என்றும் குறிப்பிட்டு கூறியிருக்கிறார் .
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உங்கள் கண்களே போதும் எங்களை கொன்றுவிட என்று தங்களை கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்கள் அனைத்தும் மிக ஈர்ப்பு நிரைந்ததாக உள்ளது என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதற்கு, ரசிகர்கள் லைக்குகளை போட்டு அவரை குஷிப்படுத்தியுள்ளனர்.

நடிகை பார்வதி நாயர் அடுத்தாக வைபவ்வுடன் ஆலம்பனா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.ஜ.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது .இந்த படத்தை பாரி.கே.விஜய் இயக்கி வருகிறார்.


Click it and Unblock the Notifications











