Don't Miss!
- News
கர்நாடகா:மாஜி PM தேவேகவுடா குடும்பத்தில் பிரளயம்! ஹாசன் தொகுதிக்கு முட்டிமோதும் மகன்-மருமகள்! அடடா
- Sports
தீபக் ஹூடா சரிப்பட்டு வர மாட்டாரு.. இந்திய அணியில் மாற்றம் தேவை.. தினேஷ் கார்த்திக் வலியுறுத்தல்
- Lifestyle
உங்க எடையை சீக்கிரம் குறைக்க உதவும் இந்த உணவுகளை நீங்க பிரிட்ஜில் சேமித்து வைத்து சாப்பிடலாம்!
- Finance
Gold: வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை.. இப்ப வாங்கலாமா.. நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
மானபங்கம் செய்துவிட்டார்..நடிகை பார்வதி நாயர் பரபரப்பு புகார்.. பணியாளர் மீது 3 பிரிவுகளில் வழக்கு!
சென்னை : தன் வீட்டில் வேலை பார்த்த முன்னாள் பணியாளர் சுபாஷ் சந்திர போஸ் மீது நடிகை பார்வதி நாயர் அடுக்கடுக்கான புகாரை கூறியுள்ளார்.
அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தவர் பார்வதி நாயர். இவர் உத்தம வில்லன், நிமிர்ந்து நில், விஜய் சேதுபதியின் சீதக்காதி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவர் நடிப்பில் ஆலம்பனா என்கிற திரைப்படம் நடித்துள்ளார் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
தவறான
செய்தியை
பரப்பாதீங்க...ஊடகங்களை
எச்சரித்த
பார்வதி
நாயர்!

நடிகை பார்வதி நாயகர்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகை பார்வதி நாயரின் வீட்டிலிருந்து ரூ9 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 கைக்கடிகாரங்கள், ரூ1.5 லட்சம் மதிப்பிலான ஐபோன், ரூ2 லட்சம் மதிப்பிலான லேப்டாப் ஆகியவை திருட்டு போய் விட்டதாகவும், வீட்டில் பணிபுரிந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ்தான் இதை திருடிவிட்டார் என்று கடந்த அக்டோபர் 20ம் தேதி நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

உண்மையில்லை
நடிகை பார்வதி நாயர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பார்வதி நாயர் மீது புகார் அளித்தார். அதில் பார்வதி நாயர் தன்மீது அளித்த திருட்டுபுகார் உண்மையில்லை என்றும், அவர் தன்னை அடித்து துன்புறுத்தியாகவும் கூறியிருந்தார்.

ஆண் நண்பர்களுடன் மது?
இந்நிலையில் நடிகை பார்வதி நாயர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், தன் வீட்டில் பணியாற்றிய முன்னாள் ஊழியரான சுபாஷ் சந்திரபோஸ், என் புகழுக்கும், பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில், யூடியூப் சேனல்களில், ஆண் நண்பர்களுடன் மது அருந்தி தகாத முறையில் இருந்ததை, அவர் பார்த்ததால் அவரை திருட்டுப்பழியை சுமத்தியாக கூறி வருகிறார். இதனால்,நான் மன உளைச்சலில் இருக்கிறேன்.

3 பிரிவுகளின் கீழ் வழக்கு
சோஷியல் மீடியாவில் பொய்யான தகவல்களை கூறி வரும் சுபாஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். அந்த புகாரின் பேரில் நுங்கம்பாக்கம் போலீசார் பார்வதி நாயர் வீட்டில் பணியாற்றிய முன்னாள் பணியாளர் சுபாஷ் சந்திரபோஸ் மீது கொலை மிரட்டல், பெண்னை மானபங்கம் செய்தல்,தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.