பச்சைக்கலர் உங்களுக்கு பக்குன்னு இருக்கு.. அஜித் பட நடிகையின் அள்ளும் ஸ்டில்ஸ்.. புகழும் ஃபேன்ஸ்!

By

சென்னை: அஜித் பட நடிகை வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Recommended Video

கற்பழிப்புகளுக்கு பெண்கள் தான் காரணம் | Parvathy Thiruvothu Tweet

அஜித்தின் என்னை அறிந்தால், கமல்ஹாசனின் உத்தமவில்லன் படங்களில் நடித்தவர் மலையாள நடிகை பார்வதி நாயர்.

பாப்பின்ஸ் படம் மூலம் அங்கு அறிமுகமான அவர் டி கம்பெனி, ஜேம்ஸ் அண்ட் லைஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

படப்பிடிப்புகள்

படப்பிடிப்புகள்

பின்னர், பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக, நட்டியின் எங்கிட்ட மோதாதே, உதயநிதியின் நிமிர் உள்பட சில படங்களில் தமிழில் நடித்தார். விவேக்கின் வெள்ளை ரோஜா, சீதக்காதி படங்களில் நடித்துள்ள அவர், இப்போது சில தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் உருவாகும் 83 படத்திலும் நடித்துள்ளார். கொரோனா காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நடிகர், நடிகைகள்

நடிகர், நடிகைகள்

லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கடந்த சில மாதங்களாக நடிகர், நடிகைகள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். அவர்களின் ஒரே பொழுதுபோக்காக இருப்பது சோசியல் மீடியாதான். இன்ஸ்டாகிராமில் தங்களது விதவிதமான போட்டோக்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். சிலர் பிகினி, மற்றும் தங்களது த்ரோபேக் போட்டோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பார்வதி நாயர்

பார்வதி நாயர்

இதற்கு கிடைக்கும் லைக்ஸ் மற்றும் புகழும் கமென்ட்களுக்கு நடிகைகள் அடிமையாக இருக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் நடிகை பார்வதி நாயர். சும்மாவே கிளாமர் ஸ்டில்களை பதிவிடும் இவர் இப்போது வெளியிட்டுள்ள போட்டோ தாறுமாறாக இருக்கிறது.

செக்ஸியானது

செக்ஸியானது

இதற்கு கேப்ஷனாக, தன்னைக் கட்டுப்படுத்த தெரிந்த பெண்ணைவிட செக்ஸியானது வேறு ஏதும் இல்லை என்று கூறியுள்ளார். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு பலர் தங்கள் கமென்ட்களை பதிவு செய்துள்ளனர். ஒருவர் கிண்டலாக, உங்க கட்டுப்பாடு சரிதான். அதுக்காக எங்க கட்டுப்பாட்டை ஏன் சோதிக்கிறீங்க? என்று கிண்டலாகக் கேட்டுள்ளார்.

தெய்வீக அழகு

தெய்வீக அழகு

பச்சைக்கலர் உங்களுக்கு பக்குன்னு இருக்கு என்று ஒருவர் கூறியுள்ளார். சிலர் இது தெய்வீக அழகு என்று கூறியுள்ளனர். ஒருவர் நீங்களும் இப்படி கிளாமருக்கு மாறிட்டீங்க, என்ன சிம்ரன் இதெல்லாம்? என்று கேட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன், உங்க கண்ணுல மேஜிக் இருக்கு என்று கூறியுள்ளார். பலர் அழகு, சூப்பர் என்று கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X