சேலையில் பளபளக்கும் பார்வதி நாயர்…கவிதை எழுதி வர்ணித்த ரசிகர் !
சென்னை : நடிகை பார்வதி நாயர் உன்பார்வையில், ரூபம், ஆலம்பனா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்
அஜித் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண்விஜயுடன் ஜோடி போட்டு நடித்திருந்தார்..
பல மொழிகளில் தனது நடிப்பு திறமையை காட்டிவரும் இவர், தற்போது சேலையில் அழகு பதுமையாக ஜொலிக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

வித்தியாசமான கதை
பார்த்திபன் இயக்கத்தில் சாந்தானு பாக்கியராஜ் மற்றும் தம்பிராமையா ஆகியோர் நடிப்பில் வெளியான கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் பார்வதி நாயர். இவருக்கு இந்த படம் ஓரளவு பெயர் சொல்லும் படமாக அமைந்தது.

அனைத்து மொழிகளிலும்
அதைத் தொடர்ந்து உத்தமவில்லன், மாலைநேரத்து மயக்கம்,எங்கிட்ட மோதாதே என பல படங்களில் நடித்துள்ளார் . தமிழில் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார்.

இரட்டை வேடத்தில்
அழகு தேவதை நடிகையாக வலம் வந்த பார்வதி நாயர் நீண்ட தேடலுக்கு பின் நடிப்புக்கு சவால் தரும் வகையில் உன் பார்வையில் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சகோதரியினை கொலை செய்யும் கொலையாளியை தேடும் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார். பழிவாங்கும் த்ரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகி உள்ளது.
Recommended Video

மாராப்பை விலக்கி
சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வரும் இவர், ரோஜாப்பூ சேலையில் , மாராப்பை விலக்கி , கையில் கண்ணாடியுடன் மினுமினுக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், நரம்பு உரிந்து, தென்றலை எடுத்த தேவதை, நித்தமும் என் நெஞ்சில் வித்தைகள் செய்து விட்டாள் என அவரை வர்ணித்து அழகான கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











