எனக்கு கல்யாணம்.. ஒரே வரியில் சொன்ன நடிகை.. நிச்சயதார்த்த போட்டோக்கள் வைரல்!
சென்னை: நடிகை பார்வதி நம்பியார் தனக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டதாக கூறி திருமண போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.
மலையாள நடிகைகளுக்கு எப்போதுமே சினிமாவில் மவுஸ் உண்டு. மலையாள தேசத்தில் இருந்து வந்த பல நடிகைகள் அந்த காலம் முதலே தமிழில் வெற்றிக்கொடி கட்டியுள்ளனர்.
பெரும்பாலும் சர்ச்சைகளில் சிக்காமல் திருமண வாழ்க்கையை தொடங்கி விடுவார்கள். அந்த வகையில் நவ்யா நாயர், காவ்யா மாதவன், நஸ்ரியா, பிரியாமணி, பாவனா ஆகியோர் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையை தொடங்கிவிட்டனர்.

கேணி படத்தில் ஹீரோயின்
இந்நிலையில் நடிகை பார்வதி நம்பியார் திருமணம் செய்து கொண்டு செட்டிலாக முடிவு செய்து விட்டார். மலையாள மொழியில் சில படங்களில் நடித்துள்ள பார்வதி நம்பியார் தமிழில் கேணி படத்தில் நடித்திருந்தார்.
நிச்சயதார்த்தம் முடிந்தது
இந்நிலையில் தனக்கு திருமணம் நடைபெறும் தகவலை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் பார்வதி நம்பியார். வினித் மேனன் என்பவருடன் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக கூறியுள்ளார். பார்வதி நம்பியார்.

ரசிகர்கள் வாழ்த்து
மேலும் நிச்சயதார்த்த போட்டோக்களையும் தனது பேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அவரது நிச்சயதார்த்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் அவருக்கும் வினித்துக்கும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

மோதிரம் மாற்றி..
இருவரும் மோதிரம் மாற்றிக்கொள்ளும் போட்டோவும் அதில் இடம்பெற்றுள்ள. பச்சை நிற உடையில் பார்வதி நம்பியார் தேவதை போல் இருக்கும் அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











