படப்பிடிப்பின் போது ஏற்பட்ட திடீர் விபத்து.. அஜித் பட நடிகைக்கு பலத்த காயம்.. அப்செட்டில் படக்குழு!

சென்னை: படப்பிடிப்பின் போது ஏற்பட்ட திடீர் விபத்தால் நடிகை பார்வதி நாயர் கைகளில் பலமாக அடிபட்டுள்ளது.

தல அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர்.

தொடர்ந்து, பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், என்கிட்ட மோதாதே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அஜித் பட நடிகை

அஜித் பட நடிகை

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். அதாரு அதாரு பாடலே அருண் விஜய் மற்றும் பார்வதி நாயர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தான் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பின் போது விபத்து

படப்பிடிப்பின் போது விபத்து

பிக் பாஸ் தமிழ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்ட கணேஷ் வெங்கட்ராமுக்கு ஜோடியாக உன் பார்வையில் என்கிற படத்தில் நடித்து வருகிறார் பார்வதி நாயர். அந்த படத்தின் படப்பிடிப்பில் தான் எதிர்பாரா விதமாக பார்வதி நாயருக்கு இந்த விபத்து நேர்ந்துள்ளது.

கையில் காயம்

கையில் காயம்

பாலிவுட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வரும் பிரபல ஒளிப்பதிவாளர் கபிர் லால் இந்த படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். உன் பார்வையில் படத்தில் சகோதரியை கொன்றவர்களை பழிவாங்கும் பார்வையற்ற பெண்ணாக போல்டான கதாபாத்திரத்தில் நடித்து வரும் பார்வதி நாயருக்கு படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட திடீர் விபத்து காரணமாக கையில் பலத்த காயம் உண்டாகி உள்ளது. ரத்தம் வடிய பார்வதி நாயர் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

ACTRESS MALLIKA ANGELA & UPASANA CHAT | MEDIUM RARE SHOP OPENING CEREMONY | FILMIBEAT TAMIL
படு கிளாமராக

படு கிளாமராக

ஆலம்பனா, ரூபம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வரும் பார்வதி நாயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட ஹாட் போட்டோக்களை போட்டு இளைஞர்களை கவர்ந்துள்ளார். சாக்ஷி அகர்வாலும், பார்வதி நாயரும் சன் டிவியில் ஒளிபரப்பான சொப்பன சுந்தரி ஃபேஷன் ஷோவிலும் நடுவர்களாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X