என்னுடையவன் போட்டோகிராபராக மாறிய தருணம்.. பாவ்னி நெகிழ்ச்சி!

சென்னை : விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை கவர்ந்த ஜோடி அமீர் மற்றும் பாவ்னி.

இவர்கள் இருவரும் அந்த நிகழ்ச்சியின்போது காதலித்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இருவரும் இணைந்து பாரீசில் விடுமுறை கொண்டாட்டத்தில் உள்ளனர். இதன் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி

விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியாக இருந்து வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின்மூலம் ஏராளமானோர் வெளிச்சம் பெற்று, சினிமாவிலும் நடித்து வருகின்றனர். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் இந்த நிகழ்ச்சி 6 சீசன்களை இதுவரை முடித்துள்ளது.

பாவ்னியுடன் காதல் கொண்ட அமீர்

பாவ்னியுடன் காதல் கொண்ட அமீர்

பிக்பாஸ் நிகழ்ச்சியின்போதே, தன்னுடைய காதலை பாவ்னியிடம் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார் அமீர். ஆனால் ஏற்கனவே திருமணமாகி கணவரை இழந்த பாவ்னி, அமீரின் காதலை ஏற்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனிடையே பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் இவர்களது ஜோடி ரசிகர்களை கவர்ந்து டைட்டிலை வென்றது.

காதல் பதிவிட்ட பாவ்னி

காதல் பதிவிட்ட பாவ்னி

இதையடுத்து மேடையிலேயே அமீரின் காதலை ஏற்ற பாவ்னி, தொடர்ந்து கடந்த காதலர் தினத்தன்று, அமீருக்கு காதல் வாழ்த்து கூறி, இருவரும் இருக்கும்படியான ரொமாண்டிக் புகைப்படங்களை பாடலுடன் வெளியிட்டார். ஆனால் திருமணம் நடக்க குறைந்தபட்சம் ஒருவருடம் ஆகும் என்றும் கூறியுள்ளார்.

குவியும் வாழ்த்துக்கள்

குவியும் வாழ்த்துக்கள்

இதையடுத்து அவர்கள் இருவரும் வாழ்க்கையில் இணையவேண்டும் என்று எதிர்பார்த்துள்ள ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அவர்கள் இருவருக்கும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இருவரும் சமீபத்தில் அஜித்தின் துணிவு படத்தில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுமுறைக் கொண்டாட்டம்

விடுமுறைக் கொண்டாட்டம்

இந்நிலையில் தற்போது இருவரும் பாரீசில் விடுமுறைக் கொண்டாட்டத்தில் உள்ளனர். இருவரும் இணைந்துள்ள புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர். தற்போது தன்னுடையவன் போட்டோகிராபராக உள்ளதால் தான் தொடர்ந்து ரிலாக்ஸ்டாக போஸ் கொடுத்துக் கொண்டிருப்பதாக பாவ்னி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களுடன் தெரிவித்துள்ளார்.

ரசிகர்களை கவர்ந்த புகைப்படங்கள்

ரசிகர்களை கவர்ந்த புகைப்படங்கள்

முன்னதாக இருவரும் தங்களது நண்பர்களுடன் இணைந்து கேரளாவில் விடுமுறை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் புகைப்படங்களையும் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டனர். அந்தப் புகைப்படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், தற்போது பாவ்னி வெளியிட்டுள்ள புகைப்படங்களும் ஏராளமான லைக்ஸ்களை அள்ளியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X