twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு பக்கம் சண்டை... ஒரு பக்கம் பிறந்தநாள் கொண்டாட்டம்.. குழப்பத்தில் ஹவுஸ்மெட்ஸ்!

    |

    சென்னை : பிக் பாஸ் வீட்டில் நேற்று பாவனி தனது 34வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

    இந்த வாரம் 'ஆகாயம்'ஆற்றலை வைத்திருக்கும் பாவனிக்கு பிக் பாஸ் வீட்டை ஆளுமை சக்தி கிடைத்துள்ளது.

    இதனால், சிம்மாசனத்தில் கெத்தாக அமைந்து கொண்டு ஹவுஸ்மெட்டுகளுக்கு சின்ன சின்ன டாஸ்க் கொடுத்து வீட்டை ஆளுமை செய்து வருகிறார்.

    தாமரை உதவியாளர்

    தாமரை உதவியாளர்

    லிவிங் ஏரியாவில் பாவனியின் அனுமதியில்லாமல் வருபவர்களை கண்காணிக்க தாமரையை உதவியாளராக வைத்துள்ளார் பாவனி. அப்படி போடு இப்ப தான் பிக் பாஸ் ஆட்டம் ஆரம்பம் ஆகுது. பாவனி தாமரையை வெச்சி செய்யப்போகிறார் என்று நினைத்தால் பாவனி வழக்கத்திற்கு மாறாகாக அமைதியாக இருக்கிறார்.

    எதுக்கு வம்பு

    எதுக்கு வம்பு

    இந்த அமைதிக்கு என்ன காரணம் என்று ஆராய்ந்த போதுதான் தெரிந்தது அம்மணிக்கு நேற்று பிறந்த நாளலாம். பிறந்த நாள் அதுவுமா எதுக்குடா வம்பு தாமரையிடம் அன்பால் இதயத்தில் இடம் பிடிக்க முடிவு செய்துள்ளார் பாவனி.

    பூவுக்கு பிறந்த நாள்

    பூவுக்கு பிறந்த நாள்

    இதையடுத்து, பாவனி நேற்று தனது 34வது பிறந்த நாளை பிக் பாஸ் வீட்டில் கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்காக பிறந்த நாள் ஸ்பெஷலாக பூவுக்கு பிறந்த நாள் பாடல் ஒளிக்கப்பட்டது. அவருக்கு மற்ற போட்டியாளர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறினர்.

    பிறந்த நாள் வாழ்த்து

    பிறந்த நாள் வாழ்த்து

    பாவனிக்கு பிறந்த நாள் பரிசாக கடிதத்துடன் ஒரு டிரஸ் பார்சலில் வந்தது. அந்த கடிதத்தை பார்த்து மகிழ்ச்சியில் கத்தினார் பவானி. மேலும், பாவனியின் குடும்பத்தின் பிறந்த நாள் வாழ்த்துக்கூறும் வீடியோ ஒளிபரப்பானது. அதில் பவானியின் குடும்பத்தின் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கூறி, பிக் பாஸ் வீட்டில், கேமை சிறப்பாக விளையாடுவதாகவும், மற்றவர்களுக்காக விளையாடாதே உன் விளையாட்டை நீ விளையாடு என்று அவருக்கு அறிவுரை கூறினார்கள்.

    Recommended Video

    Thamarai பற்றி பேசிய Namitha Marimuthu |Suruthi UNFAIR eviction | BIGG BOSS 5 TAMIL
    குழப்பத்தில் பிக் பாஸ் வீடு

    குழப்பத்தில் பிக் பாஸ் வீடு

    இந்தவாரம் லக்சரி பட்ஜெட் டாஸ்கில் பொம்மையை எடுத்துக்கொண்டு போகவிடாமல் தடுத்ததால் வருண்,நிரூப் இடையே வாக்குவாதம் முற்றி சண்டையானது. ஒரு பக்கம் சண்டை, மறுபக்கம் பிறந்த நாள் கொண்டாட்டம் என, ஒரு விதமான குழப்பத்தில் இருந்தது பிக் பாஸ் வீடு

    English summary
    pavani cut the cake to celebrate her 34th birthday at the Big Boss house.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X