Pavithra: விபத்தில் சிக்கிய குக்வித் கோமாளி புகழ் பவித்ரா.. ரசிகர்களிடம் அட்ஜெஸ்ட் செய்ய கெஞ்சல்!

சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் பவித்ரா லட்சுமி.

இந்த நிகழ்ச்சி இவருக்கு சினிமா வாய்ப்புகளையும் பெற்றுத் தந்துள்ளது. நடிகர் சதீஷுடன் இணைந்து நாய் சேகர் படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.

தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் பவித்ரா, கடந்த சில தினங்களாக எந்தப் பதிவையும் போடாத நிலையில், ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

Actress Pavithra lakshmi met with an accident and recovering

விபத்தில் சிக்கிய குக் வித் கோமாளி புகழ் பவித்ரா லட்சுமி: விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சிமூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் பவித்ரா லட்சுமி. முன்னதாக மாடலிங் மூலம் இவர் புகழடைந்திருந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகர் புகழுடன் இணைந்து பவித்ரா செய்த சேட்டைகள், ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தது. துவக்கத்தில் சுமாராக சமைத்த இவர், தொடர்ந்து விதவிதமான டிஷ்களை செய்து அசத்தினார். இடையிலேயே எலிமினேட் ஆகி வெளியேறினார்.

தொடர்ந்து வைல்ட் கார்ட் சுற்றின்மூலம் மீண்டும் நிகழ்ச்சியில் இணைந்த பவித்ரா லட்சுமி, இறுதிச்சுற்று வரை சென்று அசத்தினார். இந்த நிகழ்ச்சியில் அழகழகான காஸ்ட்யூம்களில் வந்து ரசிகர்களை கவர்ந்த பவித்ரா லட்சுமிக்கு இந்த நிகழ்ச்சி பல பட வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது. கடந்த ஆண்டில் வெளியான சதீஷ் நாயகனாக நடித்திருந்த நாய் சேகர் படத்தில் இவர் ஹீரோயினாக நடித்திருந்தார். படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தொடர்ந்து தமிழ், மலையாளத்தில் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் பவித்ரா லட்சுமியை இன்ஸ்டாகிராமில் 2 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். அடுத்தடுத்து தொடர்ந்து பதிவுகளை செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் பவித்ரா. இந்நிலையில் கடந்த சில தினங்களாக இவரது பதிவுகள் எதுவும் வராததால், ரசிகர்கள் மிகவும் சோகமடைந்தனர்.

Actress Pavithra lakshmi met with an accident and recovering

இதுகுறித்து அவர்கள் பவித்ரா லட்சுமியிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்துள்ள பவித்ரா, தான் சிறிய விபத்தில் சிக்கியதாகவும் மூன்று வாரங்கள் ஆகியுள்ளதாகவும் ஆனால் பெரிய அடி இல்லை என்றும் தெரிவித்தள்ளார். தான் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய வலியிலிருந்து மீண்டு வருவதாகவும் கூறியுள்ளார். தன்னால் புதிய புகைப்படங்களை எடுக்க முடியவில்லை என்றும் முன்னதாக தான் எடுத்துள்ள சுவிட்சர்லாந்து மற்றும் பாரீஸ் புகைப்படங்கள் மட்டுமே உள்ளதாகவும் கூறியுள்ளார்.

அந்தப் புகைப்படங்களை மட்டுமே தான் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து வருவதாகவும் கொஞ்சம் அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ளுமாறும் ரசிகர்களிடம் கேட்டுள்ளார். இதை கேட்ட ரசிகர்கள், அவர் விரைவில் தன்னுடைய காயத்திலிருந்து மீண்டு வர வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பவித்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கம், அழகான புகைப்படங்களால் நிரம்பியுள்ள நிலையில், அவர் மீண்டும் புதிய பதிவுகளை போட வேண்டும் என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X