Don't Miss!
- News
1.32 கோடி இளைஞர்கள்.. தமிழ்நாட்டில் வேலையில்லாமல் தவிக்கிறார்கள்.. அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பாவ்னி செய்துக் கொண்ட லேசர் சிகிச்சை.. அச்சச்சோ என்னாச்சு என பதறிய ரசிகர்கள்!
சென்னை : பிக்பாஸ் மூலம் பிரபலமான ஜோடியாக அமீர் -பாவ்னி காணப்படுகின்றனர். தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் பிக்பாஸ் சீசன் 5 மற்றும் அதைத் தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சிகளில் பங்கேற்று அனைவரையும் கவர்ந்தனர்.
தன்னுடைய கணவரை இழந்த பாவ்னியை திருமணம் செய்யும் விருப்பத்தை பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியிட்டார் அமீர்.
’என்ன வேணா பண்ணு நான் கவலைப்படல’..பிக்பாஸ் வீட்டில் ஸ்கோர் பண்ணும் ஜி.பி.முத்து

பிக்பாஸ் நிகழ்ச்சி
விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முன்னணி நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி காணப்படுகிறது. இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த போட்டியாளர்கள் பலர் காணப்படுகின்றனர். ஹரீஷ் கல்யாண் உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்ச்சி மூலமே சினிமாவில் தங்களின் கேரியரை பலப்படுத்திக் கொண்டார்கள்.

அமீர் -பாவ்னி ஜோடி
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 6வது சீசனில் போட்டியாளர்களின் சிறப்பான செயல்பாடுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் 5வது சீசனில் ராஜு டைட்டிலை வெற்றிக் கொண்டார். பிரியங்கா தேஷ்பாண்டே ரன்னர் அப்பாக வந்தார். ஆனால் இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களை அதிகமாக அமீர் -பாவ்னி ஜோடி கவர்ந்திருந்தது.

பாவ்னியிடம் காதலை சொன்ன அமீர்
நிகழ்ச்சியில் பாவ்னி, தன்னுடைய கணவர் தற்கொலை செய்துக் கொண்டது தொடர்பாக வருத்தத்தை பதிவு செய்த நிலையில், நிகழ்ச்சியின் பாதியில் பங்கேற்ற நடன இயக்குநர் அமீர், பாவ்னியிடம் தன்னுடைய காதலை தெரிவித்தார். தொடர்ந்து அவரை திருமணம் செய்யும் விருப்பத்தை பல சந்தர்ப்பங்களில் வெளியிட்டார்.

காதலை ஏற்காத பாவ்னி
ஆனால் நிகழ்ச்சி முடியும்வரை அவருடைய காதலை பாவ்னி ஏற்கவில்லை. தொடர்ந்து இந்த ஜோடி பல சந்தர்ப்பங்களில் இணைந்தே காணப்பட்டனர். அமீர் பிறந்தநாளில் அவரது வீட்டிற்கே சென்று அந்த கொண்டாட்டத்தில் பாவ்னி பங்கேற்றார். இவை எல்லாவற்றிற்கும் அவர் சொன்ன காரணம் நட்பு.

பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சி
தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில் நடன இயக்குநராக அமீர், தனியாக சிறப்பான பங்களிப்பை கொடுத்தார். பாவ்னிக்கு நடனம் சரியாக வரவில்லை என்றாலும் அதையும் சேர்த்து அமீரே பார்த்துக் கொண்டார். அவருக்கு எளிமையான ஸ்டெப்சை கொடுத்து தான் கடினமான ஸ்டெப்சை போட்டு டைட்டிலையும் வெற்றி கொண்டார்.

பாவ்னி லேசர் சிகிச்சை
இதையடுத்து அமீரின் காதலுக்கு பாவ்னி ஓகே, சொல்ல ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். விரைவில் இவர்களது திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தற்போது மருத்துவமனையில் லேசர் சிகிச்சை செய்துள்ளார் பாவ்னி. தன்னுடைய கைகளில் உள்ள வேண்டாத முடிகளை அகற்றும் சிகிச்சை வலியில்லாமல் சிறப்பாக உள்ளதாகவும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

பாவ்னி வீடியோ
ஆ, ஊ என்றெல்லாம் அவஸ்தை படாமல், மிகவும் எளிமையாக இந்த சிகிச்சை தற்போது அட்வான்ஸ் தொழில்நுட்பத்துடன் மேற்கொள்ளப்படுவதாகவும் அதை தான் தற்போது செய்து வருவதாகவும் அவர் வீடியோ மூலம் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். தற்போது எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காத பாவ்னி, தன்னுடைய திருமணத்தையொட்டி இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்கிறாரா என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
-
ரிகர்சலில் கூட சிங்கிள் டேக்தான்... மெர்சல் செய்த விஜய்... ட்ரெண்டாகும் ரஞ்சிதமே மேக்கிங் வீடியோ
-
கையில் குழந்தையுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த காஜல் அகர்வால்.. அந்த நடிகையும் போயிருக்காங்க!
-
சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு மாறிய ஜெயம் ரவி.. என்ன அதுக்குள்ள இப்படி மாறிட்டாரே மனுஷன்?