பெண்களை எப்படி மதிக்கணும்னு அந்த ஹீரோவுக்கு நல்லாவே தெரியும்..நடிகை பிரச்னையில் இன்னொரு ஹீரோயின்!

By

சென்னை: அந்த ஹீரோவுக்கு பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று நன்றாகவே தெரியும் என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக, அன்பே ஆருயிரே படத்தில் நிலா என்ற பெயரில் அறிமுகமானவர் மீரா சோப்ரா.

அடுத்து, பிரஷாந்தின் ஜாம்பவான், சிபி ராஜின் லீ, அர்ஜுனின் மருதமலை, கில்லாடி உட்பட பல படங்களில் நடித்தார்.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

தெலுங்கிலும் நடித்து வந்த நிலா, பிறகு தனது மீரா சோப்ரா என்ற ஒரிஜினல் பெயரில் நடிக்கத் தொடங்கினார். இந்திப் படங்களிலும் நடித்த அவர், இடையில் சிறிது காலம் அதிக படங்களில் நடிக்காமல் இருந்தார். இப்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினரான இவர் டெல்லியை சேர்ந்தவர்.

ஜூனியர் என்.டி.ஆர்.

ஜூனியர் என்.டி.ஆர்.

இப்போது லாக்டவுன் காரணமாக, அடிக்கடி தனது இன்ஸ்டாகிராமில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ட்விட்டரில் அதிரடி கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார். இந்நிலையில், ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த மீரா சோப்ராவிடம் பிரபல தெலுங்கு ஹீரோ ஜூனியர் என்.டி.ஆர். பற்றி ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, எனக்கு மகேஷ்பாபுவைப் பிடிக்கும். ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகை இல்லை என்று கூறியிருந்தார்.

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை

இதனால் ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள், மீரா சோப்ராவின் சமூக வலைத்தளப் பக்கத்தில் வக்கிரமான கருத்துக்களைப் பதிவிட ஆரம்பித்தனர். பாலியல் வன்கொடுமை செய்துவிடுவதாகவும் கொலை செய்துவிடுவதாகவும் ஆபாசமாகவும் ட்வீட் செய்ய ஆரம்பித்தனர். இதனால், நடிகை மீரா சோப்ரா சைபர் கிரைமில் புகார் அளித்தார்.

வழக்குப் பதிவு

வழக்குப் பதிவு

அதோடு, மகேஷ் பாபுவின் ரசிகையாக இருப்பது குற்றம் என்று எனக்குத் தெரியாது என மகேஷ் பாபு மற்றும் ஜூனியர் என்.டிஆருக்கு டேக் செய்து ட்விட்டரில் பகிர்ந்தார். தனக்கு வந்த அச்சுறுத்தல்களையும், ஆபாச வசவுகளையும் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து ஹைதராபாத் காவல்துறைக்கு டேக் செய்தார். இதையடுத்து ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் மீது சைபர் க்ரைம் பிரிவு வழக்குப் பதிவு செய்தனர்.

நடிகை பாயல் கோஷ்

நடிகை பாயல் கோஷ்

இந்நிலையில், நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று நன்றாகவே தெரியும் என்று அவருடன் ஓசரவல்லி என்ற தெலுங்கு படத்தில் நடித்த, நடிகை பாயல் கோஷ் தெரிவித்துள்ளார். இவர், தமிழில், தேரோடும் வீதியிலே என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தியிலும் சில படங்களில் நடித்திருக்கிறார்.

Recommended Video

இசையில்லாமல் நடனம்..அசத்தும் ஹீரோயின்..வியக்கும் ரசிகர்கள்! - வீடியோ
பெண்களை மதிப்பது

பெண்களை மதிப்பது

அவர் கூறும்போது, பாடல் காட்சிக்காக பாங்காக் சென்றிருந்தோம். சாலையில் நடந்தது ஷூட்டிங். அடுத்த ஷாட்டுக்கு நான் உடை மாற்ற வேண்டும். என் குழு எனக்காக ஒரு கூடாரத்தை அங்கு உருவாக்கியது. இதனால் ஜூனியர் என்.டி.ஆர் ஏமாற்றமடைந்தார். அவருக்கு பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பது தெரியும். அனைத்து நடிகர்களுக்கும் பெண்களை மதிப்பது பற்றி தெரியும். அதை யாரிடமும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X