கருடன் இயக்குநர் படம்.. லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியான மங்களவாரம் ஹீரோயின்.. ஆண்ட்ரியாவும் இருக்காரே!
சென்னை: சூரி கதாநாயகனாக நடித்த கருடன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்க உள்ள படத்தில் லெஜண்ட் சரவணன் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த புதுப்படத்திற்காக லெஜண்ட் சரவணன் அட்டகாசமான லுக்கிற்கு மாறியிருக்கிறார். தற்போது இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தொழிலதிபரான லெஜண்ட் சரவணன், தீபாவளி, பொங்கல், ரம்ஜான், பக்ரீத் ஏன் ஆடி மாசம் வந்தால் கூட, கலர்ஃபுல்லான உடையில், அழகான ஒயிட்டான நடிகைகளுடன் கடை விளம்பரத்தில் ஆட்டம் போட்டுவிடுவார். இந்த விளம்பரத்திற்கு விமர்சனங்கள் வந்த போதும், அதைப்பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், தன்னுடைய இலக்கை மட்டுமே குறிக்கோளாக வைத்து நகர்ந்தார்.

தி லெஜண்ட்: தல அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய ஜெர்ரி & ஜேடி ஆகியோர் இயக்கிய தி லெஜண்ட் படத்தில் ஹீரோவாக மாஸ் என்ட்ரி கொடுத்தார். இந்த படம் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, ஆகிய மொழிகளில் திரையரங்களில் வெளியானது. இந்த படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொண்ட லெஜண்ட் தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பேசி ரசிகர்களை கவர்ந்தார். இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றுத்தந்தது.
சூப்பர் ஹிட் பாடல்கள்: இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற வாடிவாசல் பாடல், மொசலோ மொசலு பாடல் என அனைத்துப்பாடல்களும் ரசிகர்களை ஆட்டம் போட வைத்து ஹிட்டடித்தன. டான்ஸ், சண்டை என அனைத்திலும் நம்ம அண்ணாச்சி பின்னிபெடல் எடுத்திருந்தார்.இப்படம் 20 கோடி வரை வசூல் செய்தது.
இரண்டாவது படம்: தி லெஜண்ட் படத்தை தொடர்ந்து, இரண்டாவதாக எதிர்நீச்சல், கொடி, பட்டாஸ் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கவுள்ளார். அண்மையில் இவர் இயக்கத்தில் உருவான கருடன் மிகப்பெரிய அளவில் வசூலை அள்ளியது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெற்று வரும் நிலையில், படம் குறித்து விமான நிலையத்தில் பேசிய லெஜண்ட், இப்படத்தில் மேக்கப் இல்லாமல் நடித்து வருகிறேன். இந்த படத்தில் என்னை வித்தியாசமான கெட்டப்பில் ரசிகர்கள் பார்க்கலாம். நான் மட்டுமின்றி மற்ற நடிகர் நடிகைகளும் மேக்கப் இல்லாமல் எதார்த்தமாகவே நடிக்கிறார்கள். இந்த படம் அனைத்து மக்களும் ரசிக்க கூடிய பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட கதையில் உருவாகி வருகிறது என்றார்.
ஜோடி யார் தெரியுமா: இந்த நிலையில், லெஜண்ட் சரவணனுக்கு இப்படத்தில் ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பயல் ராஜ்புட் நடித்து வருகிறாராம். மேலும் நடிகை ஆண்ட்ரியா, நடிகர் ஷாம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக லெஜண்ட் சரவணன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்ததாக வெளிநாடுகளிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











