இச்சைக்கு இணங்கலைன்னா அவ்ளோ தான்.. பிரபல நடிகைக்கு ஜிம் பயிற்சியாளரால் வந்த வினை.. என்ன ஆச்சு?
கொல்கத்தா: வங்க மொழியிலும், இந்தி மொழியிலும் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பாயல் சர்க்கார். அவரது ஜிம் பயிற்சியாளர் தொடர்ந்து ஆபாச மெசேஜ்கள் அனுப்பி டார்ச்சர் செய்து வந்த நிலையில், அதிரடியாக நடிகை போலீஸில் புகார் அளித்துள்ளார்.
நடிகைகள் எப்போதுமே தங்களை ஃபிட்டாக வைத்துக் கொண்டால் தான் புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். அதனால், பல முன்னணி நடிகைகளும் ஜிம்களில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
பெரும்பாலும், நடிகைகளுக்கு ஜிம் பயிற்சியை ஆண்கள் தான் வழங்கி வருகின்றனர். ஆனால், சில சமயங்களில் ஜிம் பயிற்சியாளர்கள் நடிகைகளிடம் அத்துமீறும் சம்பவங்களும் அரங்கேறி அதிர்ச்சியை கொடுப்பது வாடிக்கையாகி வருகிறது.

பாயல் சர்க்கார்
வங்க மொழி படங்களிலும் இந்தி படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பாயல் சர்க்கார். அவருக்கு சமீப காலமாகவே மொபைலுக்கு ஆபாச மெசேஜ்களும், ஆபாச பட வீடியோக்களையும் மர்ம நபர் ஒருவர் அனுப்பி டார்ச்சர் செய்துள்ளார்.

போலீஸில் புகார்
தனக்கு தொடர்ந்து மர்ம நபரிடம் இருந்து ஆபாச மெசேஜ்களும், நிர்வாண வீடியோக்களும் வருவதாக சமீபத்தில் சைபர் கிரைமில் நடிகை பாயல் சர்க்கார் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், இந்த மோசமான வேலையை நடிகையிடம் யார் பார்த்தது என்கிற அதிர்ச்சி தகவல் நடிகையை மட்டுமின்றி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஜிம் டிரெய்னரின் காம லீலை
நடிகைகள் தொடர்ந்து தங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்ள ஜிம்மிற்கு சென்று வருகின்றனர். ஜிம் ட்ரெய்னர்கள் நடிகைகளின் ஆரோக்கியத்தில் அதிக பங்கு வகிக்கின்றனர். இந்நிலையில், நடிகை பாயல் சர்க்காரின் ஜிம் டிரெய்னர் தான் வேறொரு எண்ணில் இருந்து இப்படி நடிகைக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்த நிலையில், நடிகை ஷாக் ஆகி உள்ளார்.

இத்தனைக்கும் உறவினர்
அந்த ஜிம் டிரெய்னர் இத்தனைக்கும் நடிகை பாயல் சர்க்காரின் தூரத்து சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மீது பெரும் நம்பிக்கை வைத்து தொடர்ந்து அவரது ஜிம்மில் பயிற்சி பெற்று வந்த நடிகையை அடைய ஏகப்பட்ட சூழ்ச்சிகளை செய்துள்ளார். சமீபத்தில், நேரடியாகவே நடிகையை மிரட்டி உள்ள நிலையில், தான் அவரது சுயரூபம் அம்பலமாகி உள்ளது.

இச்சைக்கு இணங்கலைன்னா
தன்னுடன் படுக்கையை நடிகை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் தனது இச்சைக்கு நடிகை சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால், நடிகையை ஆபாசமாக மார்ஃபிங் செய்து வைத்துள்ள வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என ஜிம் பயிற்சியாளர் மிரட்டி உள்ளார்.

புகார் கொடுத்த நடிகை
இதனால், கடுப்பான நடிகை பாயல் சர்க்கார் உடனடியாக கொல்கத்தா காவல் ஆய்வாளரிடம் இதுதொடர்பான புகாரை அளித்துள்ளார். மேலும், ஏற்கனவே சைபர் கிரைமில் உள்ள புகாருக்கும் இவர் தான் காரணம் என்பதையும் கூறி உள்ளார். இதுதொடர்பான விசாரணையை போலீசார் முடுக்கி உள்ளனர்.

அரசியலில் ஈடுபாடு
நடிகை பாயல் சர்க்கார் சினிமாவை தாண்டி அரசியலிலும் ஈடுபாடு செலுத்தி வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்த பாயல் சர்க்கார், கடந்த 2021ல் மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் பெஹாலா பூர்பா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தொடர்ந்து சினிமா மற்றும் அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











