நள்ளிரவில் மாடியில் இருந்து குதித்து இளம் நடிகை தற்கொலை.. பதற வைக்கும் காரணம்!
மும்பை: மும்பையில் இளம் நடிகை ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை சேர்ந்தவர் இளம் நடிகை பியர்ல் ராம் பஞ்சாபி. இவர் சில திரைப்படங்கள் மற்றும் விளம்பரப் படங்களில் நடித்துள்ளார்.
டிவி சீரியல்களிலும் பியர்ல் ராம் பஞ்சாபி நடித்துள்ளார். 31 வயதான பியர்ல் மும்பை கென்வுட் சொஸைட்டி குடியிருப்பு பகுதியில் அப்பார்ட்மென்ட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

வாய்ப்புகள் கிடைக்கவில்லை
பாலிவுட்டில் பெரிய நடிகையாக வலம் வரவேண்டும் என்பது பியர்ல் ராம் பஞ்சாபியின் விருப்பமாக இருந்துள்ளது. ஆனால் அவருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை என தெரிகிறது.

மாடியில் இருந்து குதித்து
இதனால் கடுமையான மன உளைச்சலில் இருந்துள்ளார் பியர்ல் ராம் பஞ்சாபி. இந்நிலையில் நேற்று அதிகாலை ஒரு மணிக்கு மாடியில் இருந்து குதித்து நடிகை பியர்ல் ராம் பஞ்சாபி தற்கொலை செய்து கொண்டார்.

பிரேத பரிசோதனை
ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடப்பதை பார்த்த குடியிருப்பின் காவலாளி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

திடுக் தகவல்கள்
நடிகை தற்கொலை குறித்து ஒஷிவாரா காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மனநலம் பாதிப்பு
சினிமாவில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்காததால்
நடிகை பியர்ல் ராம் பஞ்சாபி மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி கோபப்படும் அவர், தனது தாயுடனும் சண்டை போட்டு வந்துள்ளார்.

குடும்பத்தினர் மறுப்பு
இந்நிலையில் கடுமையான மன உளைச்சலில் இருந்த அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக வெளியான தகவலை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

அது ஒரு வதந்தி
இதுபோன்ற தகவல்கள் தங்களை காயப்படுத்துவதாக அவர்கள் கூறியுள்ளனர். மேலும் பியர்ல் ராம் பஞ்சாபி மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக பரவும் தகவல் ஒரு வதந்தி என்றும் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











