அய்யோ கடவுளே.. இந்த செய்தி உண்மையா? யாராவது வதந்தின்னு சொல்லுங்களேன்.. பிரபல நடிகை கண்ணீர்!

சென்னை: இயக்குநர் கேவி ஆனந்தின் மறைவு செய்தி வதந்தியாக இருக்க வேண்டும் என பிரபல நடிகை கண்ணீர் விட்டுள்ளார்.

பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான கேவி ஆனந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் கடந்த 24ஆம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கேவி ஆனந்த்.

தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிர் பிரிந்தது.

அதிர்ச்சியுடன் இரங்கல்

அதிர்ச்சியுடன் இரங்கல்

இயக்குநர் கேவி ஆனந்தின் மறைவு தமிழ் சினிமா பிரபலங்கள் மத்தியில் பேரிடியாக இறங்கியுள்ளது. சினிமா பிரபலங்கள் பலரும் அவரது மறைவை நம்ப முடியாமலும் ஏற்க முடியாமலும் அதிர்ச்சியுடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வதந்தி என்று சொல்லுங்களேன்..

அந்த வகையில் நடிகை பியா பாஜ்பீ, கேவி ஆனந்தின் மறைவால் தான் அடைந்த அதிர்ச்சியை தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது, அய்யோ கடவுளே.. இந்த செய்தி உண்மையா? நம்ப முடியவில்லை.. தயவு செய்து கேவி சார் குறித்து வரும் செய்தி வதந்தி என்று சொல்லுங்கள் என பதிவிட்டுள்ளார்.

பேச்சே வரவில்லை..

மற்றொரு டிவிட்டில், என்னிடம் பேச வார்த்தையில்லை.. பேச்சே வரவில்லை.. அதிர்ச்சியாக உள்ளது. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் சார் என உடைந்த இதயத்துடன் பதிவிட்டுள்ளார் பியா பாஜ்பீ.

Recommended Video

KV Anand மறைவு! பிரபலங்கள் கண்ணீர் | Vivekh இழப்பே மறக்கவில்லை #RIPAnand
துருதுரு சரோவாக..

துருதுரு சரோவாக..

பாலிவுட் நடிகையான பியா பாஜ்பீக்கு தனது கோ படத்தில் வாய்ப்பு கொடுத்தார் கேவி ஆனந்த். இதில் சரோ என்ற கேரக்டரில் துருதுரு பெண்ணாக பலரையும் கவர்ந்தார் பியா. அந்தப் படத்தில் ஹீரோயினை காட்டிலும் பியாவின் நடிப்பு பலரையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X