டெஸ்ட் எடுத்து ஒரு வாரம் ஆயிடுச்சு.. இன்னும் ரிசல்ட் வரல.. கொரோனாவுக்கு அண்ணனை இழந்த நடிகை புகார்!
சென்னை: தனது சகோதரர் இறப்பை தொடர்ந்து தங்களின் குடும்பத்தினர் எடுத்த கொரோனா டெஸ்ட்டுக்கான ரிசல்ட் ஒரு வாரம் ஆகியும் இன்னும் வரவில்லை என நடிகை பியா பாஜ்பீ குற்றம்சாட்டியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை உலுக்கி வருகிறது.
தென் மாநிலங்களை காட்டிலும் வடமாநிலங்களில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது.

தலைநகர் டெல்லி
பல மாநிலங்களில் மருத்துவமனை படுக்கை பற்றாக்குறை, ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புக்ள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. மேலும் தலைநகர் டெல்லியிலும் இதே நிலையில்தான் இருக்கிறது.

நடிகை சகோதரர் மரணம்
கடந்த வாரம் உத்தர பிரதேசத்தை சேர்ந்த நடிகை பியா கொரோனாவால் பாதித்துள்ள தனது சகோதரருக்கு உதவ வேண்டும் என ட்விட்டரில் உதவி கேட்டிருந்தார். அவருக்கு உதவி கிடைக்காத நிலையில் ஐந்து மணி நேரத்திலேயே அவரின் சகோதரர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இன்னும் ரிப்போர்ட் வரவில்லை
இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கடந்த 7ஆம் தேதி பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அதற்கான முடிவுகள் இன்னும் வரவில்லை எனத் தெரிகிறது.

ஒரு வாரம் ஆகிவிட்டது
இதனை நடிகை பியா பாஜ்பீ தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதாவது மே 7ஆம் தேதி என்னுடைய மொத்த குடும்பம் கொரோனா சோதனை செய்தது.. இன்று 13 தேதியாகிவிட்டது. இதுவரை ரிப்போர்ட்டும் வரவில்லை ஒன்றும் வரவில்லை. பின் ட்ராப் சைலன்ஸாக உள்ளது. கடவுள் அருளால் என் குடும்பம் பாதுகாப்பாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











