அம்மாடியோ..உச்சகட்ட கவர்ச்சி..ரசிகர்களை கிறங்கடித்த பியா பாஜ்பாய் !

சென்னை : தனது தனித்துவமான நடிப்பின் மூலமும் மெய் மறக்கும் அழகின் மூலமும் நம் அனைவரையும் ரசிக்க வைத்து வருபவர் நடிகை பியா பாஜ்பாய்.

பொய் சொல்ல போறோம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தற்போது பல்வேறு திரைப்படங்களில் வெற்றிகரமாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் லாக்டவுன் சூழலில் தொடர்ந்து தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் பியா பாஜ்பாய் நாளுக்கு நாள் தன்னுடைய உடையை குறைத்து தற்போது அனைவரும் அசந்து போகும் வகையில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

நீங்காத நினைவுகளை

நீங்காத நினைவுகளை

தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் பல படங்களில் பல கதாபாத்திரங்கள் வந்து நம் அனைவரையும் ரசிக்க வைப்பது உண்டு ஆனால் அனைத்து கதாபாத்திரங்களும் மனதில் எப்பொழுதும் நிலைத்து நிற்பதில்லை. ஒரு சில கதாபாத்திரங்கள் மட்டுமே நம் மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருந்து என்றும் நீங்காத நினைவுகளை பெற்றிருக்கும். அந்த வகையில் கோவா மற்றும் கோ படங்களில் பியா பாஜ்பாய் நடித்த கதாபாத்திரங்கள் இன்றளவும் பல ரசிகர்களின் மனதில் நிலைத்து நின்று வருகிறது.

மிகவும் கவனிக்கப்பட்டது

மிகவும் கவனிக்கப்பட்டது

தமிழில் முதன்முதலில் பொய் சொல்ல போறோம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பியா பாஜ்பாய் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பல படங்களில் நடித்துவருகிறார். தமிழில் இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் வெங்கட் பிரபு இயக்கிய கோவா மற்றும் கே வி ஆனந்த் இயக்கிய கோ என இந்த இரண்டு திரைப்படங்களில் இவரது கதாபாத்திரங்கள் மிகவும் கவனிக்கப்பட்டது.

துருதுருவென அங்குமிங்கும்

துருதுருவென அங்குமிங்கும்

சுருள் முடியுடன் துருதுருவென அங்குமிங்கும் ஓடிக்கொண்டு தனது இயல்பான நடிப்பை இந்த இரண்டு படங்களின் மூலமும் வெளிப்படுத்திய பியா பாஜ்பாய் வெங்கட்பிரபு இயக்கிய கோவா படத்தில் கோவா பெண்ணாக ஆக வந்து கலக்கியிருப்பார்.

அஜித்துடன் இணைந்து

அஜித்துடன் இணைந்து

முழுக்க முழுக்க காமெடியில் உருவான இந்த திரைப்படத்தில் இவர் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருப்பார். கோவா படத்திற்கு முன் ஏகன் படத்தில் அஜித்துடன் இணைந்து ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருந்த இவரை அஜித் தான் வெங்கட் பிரபுவிடம் அறிமுகம் செய்து வைத்து பின் இவர் கோவாவில் நடித்ததாக சொல்லப்படுகிறது.

சரோ என்ற சரஸ்வதியாக

சரோ என்ற சரஸ்வதியாக

வெங்கட் பிரபுவின் கோவா திரைப்படத்தில் சுறுசுறுப்பான பெண்மணியாக வந்து நம் அனைவரையும் கவர்ந்த பியா பாஜ்பாய் அடுத்த படத்திலேயே கே.வி ஆனந்த் இயக்கத்தில் நீண்ட எதிர்பார்ப்புடன் வெளியாகிய கோ திரைப்படத்தில் சரோ என்ற சரஸ்வதியாக வந்து தனது வெள்ளந்தியான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார்.

விருதையும் பெற்றுள்ளார்

விருதையும் பெற்றுள்ளார்

இவ்வாறு படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் பியா பாஜ்பாய் கோ படத்திற்காக சிறந்த துணை கதாநாயகி விருதையும் பெற்றுள்ளார். இவ்வாறு தமிழில் கலக்கி வந்த பியா பாஜ்பாய் தற்பொழுது ஹிந்தி மற்றும் தெலுங்கு என பல மொழிகளில் வெளுத்துக் கட்டி வருகிறார்.

அவ்வப்போது இன்ஸ்டாகிராம்

அவ்வப்போது இன்ஸ்டாகிராம்

கொரானாவின் அதீத நோய் தொற்று பரவலின் காரணமாக உலகிலுள்ள பல வேலைகள் மற்றும் நிறுவனங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் திரைப்பட படப்பிடிப்புகளும் முற்றிலும் முடங்கியுள்ளது. இந்நிலையில் பியா பாஜ்பாய் நடித்த பல படங்கள் வெளியாக தயாராக உள்ள நிலையில் தனது புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்.

படுகவர்ச்சியாக

படுகவர்ச்சியாக

இவர் பதிவிடும் புகைப்படங்கள் நாளுக்கு நாள் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வரும் நிலையில் இவர் கவர்ச்சியில் மேலும் கலக்கி வருகிறார். அவ்வாறு இவர் பதிவிடும் புகைப்படங்கள் படுகவர்ச்சியாக நாளுக்கு நாள் உடையின் அளவை குறைத்துக் கொண்டே செல்லும் பியா பாஜ்பாய் தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் ஒன்றில் மேலே வெறும் வெள்ளை நிற ட்ரான்ஸ்பரண்ட் உடை மட்டும் அணிந்து கீழே எதுவும் அணியாமல் வெறும் சட்டையை மட்டும் ஸ்டைலாக கட்டிக்கொண்டு படுகவர்ச்சியாக வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது அனைவராலும் ரசிக்கப்பட்டு இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X