அவர் ஒரு ஜெம்.. அவரை போன்ற ஒருவரை பார்த்ததேயில்லை.. இயக்குநர் ஏஎல் விஜயை புகழும் பிரபல நடிகை!

சென்னை: கங்கனா ரனாவத்தை தொடர்ந்து மேலும் ஒரு பிரபல நடிகை இயக்குநர் ஏஎல் விஜய்யை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பாராட்டுக்குரிய படங்களை கொடுத்து வருபவர் இயக்குநர் ஏஎல் விஜய். ஏராளமான விளம்பர படங்களை இயக்கியுள்ள விஜய் கிரீடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார்.

தொடர்ந்து பொய் சொல்ல போறோம், மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம், தலைவா, சைவம், தேவி, வனமகன், தேவி 2 என பல படங்களை கொடுத்துள்ளார்.

தலைவி படம்

தலைவி படம்

கடைசியாக அவரது இயக்கத்தில் குட்டி ஸ்டோரி என்ற ஆந்தலாஜி படம் வெளியானது. தற்போது மறைந்த நடிகையும் அரசியல் தலைவருமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை தலைவி என்ற பெயரில் எடுத்து வருகிறார் ஏஎல் விஜய்.

ஜெவாக கங்கனா

ஜெவாக கங்கனா

இந்தப் படத்தில் பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்கிறார். நடிகர் அரவிந்த் சாமி எம்ஜிஆராக நடிக்கிறார். இப்படத்தின் போஸ்டர்களே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

உணர்ச்சிவசப்பட்ட கங்கனா

உணர்ச்சிவசப்பட்ட கங்கனா

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெயிலர் லாஞ்ச் சென்னையில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய கங்கனா ரனாவத், ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டார். முதல்முறையாக திறமை வாய்ந்தவராக இருப்பதற்காக மோசமாக உணரவில்லை என்று கூறினார். படத்தின் இயக்குனர் ஏஎல் விஜய்யை பாராட்டிய அவர் தன்னை மிகுந்த மரியாதையுடன் நடத்தினார் என்றார்.

நடிகை பியா பாஜ்பீ

நடிகை பியா பாஜ்பீ

கங்கனா பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கங்கனாவின் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள மற்றொரு நடிகையும் இயக்குனர் ஏஎல் விஜய் பற்றி இதே போன்ற வார்த்தைகளுடன் புகழ்ந்துள்ளார். அதாவது நடிகை பியா பாஜ்பீ ஏஎல் விஜய் குறித்து டிவிட்டியுள்ளார்.

அவர் ஒரு ஜெம்

இதுதொடர்பான அவரது டிவிட்டில், "கங்கனா சொல்வதில் முற்றிலும் உடன்படுகிறேன். என்னை படங்களில் அறிமுகப்படுத்திய முதல் இயக்குனர் விஜய் ஜி, எனது முதல் படம் பொய் சொல்ல போறோம் (தமிழ்) .. ஆம், அவரைப் போன்ற ஒருவரை நான் இதுவரை சந்தித்ததில்லை.. அவர் ஒரு ஜெம்.." என பதிவிட்டுள்ளார்.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

நடிகை பியா, ஏஎல் விஜய்யின் பொய் சொல்ல போறோம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்தப் படத்தில் கார்த்திக் குமார், நாசர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில நடித்திருந்தனர். இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X